ஒரே நாளில் 525 ரன்கள்! டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை இந்திய மகளிர் அணி படைத்திருக்கிறது.
![ஒரே நாளில் 525 ரன்கள்! டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி! indian womens cricket team hit highest score in single day in test history MA Chidambaram Stadium Chennai India Women vs South Africa Women ஒரே நாளில் 525 ரன்கள்! டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/28/71ab8bd479cbe6ee625e48b83f2e99981719587543949572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்:
தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி, 3 டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜூன் 28) தொடங்கியது டெஸ்ட் போட்டி. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மின் ப்ரித் கவுர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்தவகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினார்கள்.
ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை இருவரும் விளையாடினர். இவர்களது ஜோடியை பிரிக்க பிடியாமல் தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். அந்தவகையில் இவர்களது பார்ட்னர்ஷிப் 292 ரன்கள் வரை விக்கெட்டை இழக்காமல் விளையாடியது. மகளிர் டெஸ்ட் போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் என்ற சாதனையை ஷபாலி ஷர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா படைத்தனர்.
மந்தனா சதம், ஷபாலி இரட்டை சதம்:
ஸ்மிரிதி மந்தனா 161 பந்துகள் களத்தில் நின்று 1 சிக்ஸர் 27 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 149 ரன்களை குவித்தார். பின்னர் வந்த சுபா சதீஸ் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அதிரடியாக விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா இரட்டை சதத்தை பதிவு செய்தார். 197 பந்துகள் களத்தில் நின்ற அவர் 23 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 205 ரன்களை குவித்தார். அதேபோல் ஜெமிமா ரோட்ரீகஸ் 55 ரன்கள் சேர்த்தார்.
ஒரே நாளில் அதிக ரன்கள் குவித்த அணி:
5️⃣2️⃣5️⃣ Runs ✨ ✨#TeamIndia create history by recording the Highest Team Total on Day 1 in Women’s Test Cricket 🔝 👏#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/XF00JLNl5K
— BCCI Women (@BCCIWomen) June 28, 2024
4 விக்கெட் இழந்த நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 525 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி ஒரே நாளில் அதிக ரன்களை குவித்து சாதனை படைத்திருக்கிறது. அதேபோல், ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையையும் நம்முடைய இந்திய மகளிர் அணி படைத்திருக்கிறது.
மேலும் படிக்க: Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
மேலும் படிக்க:Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)