மேலும் அறிய

தொடர்ந்து சொதப்பும் ரஹானே...வாய்ப்புக்காக வரிசையில் நிற்கும் வீரர்கள்...என்ன செய்யப்போகிறது இந்தியா?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டனாக ஆடி வரும் ரஹானே தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது, இளம் வீரர்களுக்கான வாய்ப்பை தட்டிப்பறிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி 345 ரன்களை அடித்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சுமாராக ஆடி 84 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் பலரும் சொதப்பியிருந்தாலும் ரஹானேவை மட்டும் தனியாக குறிப்பிட்டு பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், ரஹானே தொடர்ந்து மோசமான ஆட்டத்தை ஆடி வருகிறார். இளம் வீரர்கள் ஏகப்பட்ட பேர் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் ரஹானே தொடர்ந்து அணியில் நீடிப்பாரா? என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.
 
அஜிங்கியா ரஹானே இந்திய வீரர்களிலேயே கொஞ்சம் அபூர்வமானவர். மற்ற இந்திய வீரர்கள் உள்ளூரில் கிரிக்கெட் ஆடுவதை அதிகம் விரும்பிய நேரத்தில் வெளிநாட்டு மைதானங்களில் அதிகம் ஆட விரும்பியவர். அவருடைய ரெக்கார்டுகளை எடுத்துப்பார்த்தால் இந்தியாவை விட வெளிநாடுகளிலேயே அதிக ரன்களை எடுத்திருப்பார். ஸ்பின்னை விட வேகப்பந்து வீச்சையே சிறப்பாக சமாளித்திருப்பார். இதனாலயே ரஹானே ஒரு ஸ்பெசலான வீரராக பார்க்கப்பட்டார். வெளிநாட்டு மைதானங்களில் இந்தியாவின் துருப்புச்சீட்டாக பார்க்கப்பட்டார்.


தொடர்ந்து சொதப்பும் ரஹானே...வாய்ப்புக்காக வரிசையில் நிற்கும் வீரர்கள்...என்ன செய்யப்போகிறது இந்தியா?
 
ஆனால், அவரது சமீபத்திய பெர்ஃபார்மென்ஸ்கள் சொல்லிக்கொள்ளுமளவுக்கு இல்லை. அளவுக்கு அதிகமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்ட பிறகும் ஃபார்முக்கு திரும்பாமல் சொதப்பி கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 29 இன்னிங்ஸ்களில் ஆடி 683 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 24.4 மட்டுமே. 2020 லாக்டவுணுக்கு பிறகு இந்தியா ஆடிய முதல் தொடரான ஆஸ்திரேலிய தொடரிலிருந்து ரஹானேவின் பெர்ஃபார்மென்ஸை பார்த்தாலே அவரின் ஃபார்ம் அவுட்டை புரிந்து கொள்ள முடியும். 
 
அந்த ஆஸ்திரேலிய தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் களமிறங்கிய ரஹானே 268 ரன்களை எடுத்திருந்தார். இந்த 8 இன்னிங்ஸ்களில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் ஒரே ஒரு சதத்தை மட்டுமே அடித்திருந்தார். மெல்பர்னில் நடைபெற்ற அந்த பாக்ஸிங் டே டெஸ்ட்டில் 112 ரன்களை எடுத்திருந்தார். அடுத்து இந்தியாவில் வைத்து நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 4 போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் களமிறங்கியிருந்தார்.  இந்த 6 இன்னிங்ஸ்களில் மொத்தம் 112 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 67 ரன்களை அடித்திருந்தார். இந்த தொடரில் அவர் அடித்த ஒரே ஒரு அரைசதம் அதுதான்.
 

தொடர்ந்து சொதப்பும் ரஹானே...வாய்ப்புக்காக வரிசையில் நிற்கும் வீரர்கள்...என்ன செய்யப்போகிறது இந்தியா?
 
அடுத்ததாக ஜுன் மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் நியுசிலாந்துக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸிலும் 49, 15 என்றே ஸ்கோர் செய்திருந்தார். இந்த தொடர் முடிந்த கையோடு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா களமிறங்கியது. இந்த தொடரில் 4 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் களமிறங்கிய ரஹானே 105 ரன்களை மட்டுமே எடுத்தார். லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் ஒரே ஒரு அரைசதம் அடித்திருந்தார். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கு நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 35 ரன்களிலும் இரண்டாம் இன்னிங்ஸில் 4 ரன்களிலும் ஆட்டமிழந்திருந்தார்.
 
ஆஸ்திரேலிய தொடரிலிருந்து இப்போது வரை 25 இன்னிங்ஸ்களில் களமிறங்கியிருக்கிறார். இந்த 25 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்களையும் 1 சதத்தையும் மட்டுமே அடித்திருக்கிறார். மீதமிருக்கும் 22 இன்னிங்ஸ்களிலும் சொதப்பலே. சதம் அடிப்பதும் அரைசதம் அடிப்பதும் மட்டுமே சாதனை அல்ல. அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது தேவையான 10 ரன்களை அடித்துக் கொடுத்தால் கூட சாதனைதான். ஆனால், ரஹானே அப்படி தாக்கம் ஏற்படுத்தும் வகையில் கூட பெரிதாக எங்கேயும் ஆடவில்லை. வருடத்திற்கு ஒரே ஒரு நல்ல இன்னிங்ஸை மட்டுமே ஆடி வருகிறார்.
 

தொடர்ந்து சொதப்பும் ரஹானே...வாய்ப்புக்காக வரிசையில் நிற்கும் வீரர்கள்...என்ன செய்யப்போகிறது இந்தியா?
 
இங்கிலாந்துக்கு எதிரான தொடரே ரஹானேவுக்கான கடைசி வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித், ராகுல், கோலி என முக்கிய வீரர்கள் அத்தனை பேரும் நியுசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆடாததால், வேறு வழியின்றி ரஹானேவுக்கு கேப்டன்சி வழங்கப்பட்டது.
 
அடுத்த போட்டியில் கோலி ப்ளேயிங் லெவனுக்கு திரும்பும்போது அவர் நம்பர் 4 இல் இறங்குவார். அப்படியெனில் ரஹானே அவருடைய நம்பர் 5 க்கு திரும்பியாக வேண்டும். ஆனால், நம்பர் 5 இல் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்திருக்கிறார். இரண்டாவது டெஸ்ட்டையே விட்டுவிட்டாலும், அடுத்தடுத்த தொடர்களில் ரோஹித்தும் ராகுலும் ஓப்பனர்களாக இறக்கும் போது சுப்மன் கில் மாதிரியான இளம் வீரர் எங்கே இறங்குவார் எனும் கேள்வி எழும். அவரை மிடில் ஆர்டரில் இறக்கலாம் என ஏற்கனவே ஒரு திட்டம் இருக்கிறது. அப்படி நடக்கும்பட்சத்திலும் ரஹானே மீதே கை வைக்கப்பட்டும். இது போதாதென சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் வெளியில் வாய்ப்புக்காக காத்திருக்க வேறு செய்கிறார்கள். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் ரஹானே தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கிறார். ரஹானேவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அது அவரது கிரிக்கெட் கரியரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாய்ப்பாகவே அமையும். ரஹானே என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

தலைப்பு செய்திகள்

ஒரே போட்டியில் 4 சாதனைகள்...ஷ்ரேயாஸ் ஐயருக்கு குவியும் பாராட்டுகள்...
ஒரே போட்டியில் 4 சாதனைகள்...ஷ்ரேயாஸ் ஐயருக்கு குவியும் பாராட்டுகள்...
Bhuvneshwar Kumar: சர்ப்ரைஸ்..! அகர்கர் போனதும் புவனேஷ்வர் குமார் கம்பேக், 4 ஆண்டுகளுக்குப் பின்.. IND Vs NZ T20
சர்ப்ரைஸ்..! அகர்கர் போனதும் புவனேஷ்வர் குமார் கம்பேக், 4 ஆண்டுகளுக்குப் பின்.. IND Vs NZ T20
IND vs WI: கொழுத்திய ஹோப்.. ரூட் எடுத்து செட்டிங் செய்த ரூதர்ஃபோர்ட்! 172 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs WI: கொழுத்திய ஹோப்.. ரூட் எடுத்து செட்டிங் செய்த ரூதர்ஃபோர்ட்! 172 ரன்களை எட்டுமா இந்தியா?
Harmanpreet Kaur:
Harmanpreet Kaur: "என்றைக்கும் நீ தலைவிதான்.." ஹர்மன்ப்ரீத் கேப்டன்சியில் இந்திய கிரிக்கெட் படைத்த சாதனைகள் இத்தனையா?

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget