Gambhir IND Vs SA: ”யோவ்.. கம்பீரு” என்னயா வேணும் உனக்கு - நல்லா இருந்த டீமை சிதைச்சிட்டாரு - புலம்பும் ரசிகர்கள்
Gambhir IND Vs SA: தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் கட்டமைப்பையே சிதைத்து வருவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Gambhir IND Vs SA: தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வலுவான அணிக்கு பதிலாக, தனக்கு பிடித்த அணியை களத்தில் இறக்குவதாகவும் ரசிகர்கள் சாடி வருகின்றனர்.
இந்திய அணி தோல்வி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்கா அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் கில் தலைமையிலான இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 124 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல், 93 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்ரிக்கா அணி, இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-0 என சொந்த மண்ணில் தொடரை இழந்த நிலையில், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான இந்த தோல்வி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
கம்பீர், அகர்கர் மீது ஆவேசம்:
உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக இருந்த இந்திய அணி, கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகே மோசமாக செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் மீண்டும் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றபோது பயிற்சியாளராக இருந்த நபரை கருத்தில் கூட கொள்ளாமல், வெறும் ஆலோசகராக மட்டுமே இருந்தவரை இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆக்கியது தான் அணியின் இந்த நிலைமைக்கு காரணம் என விமர்சித்து வருகின்றனர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவது, இந்திய அணியின் கட்டமைப்பில் உள்ள பலவீனத்தை வெளிச்சம்போட்டு காட்டுவதாகவும் விமர்சிக்கின்றனர். கம்பீருக்கு ஆதரவாக செயல்பட்டு ஸ்ரேயாஸ் அய்யர், ஷமி, சர்ஃப்ராஸ் கான் ஆகியோரை அகர்கரின் குழு தேர்வு கூட செய்வதில்லை எனவும், அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்ஷன் போன்றோருக்கு போதிய வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை என ரசிகர்கள் காட்டமாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கம்பீர் மற்றும் அகர்கர் கூடணியின் முடிவுகளை சாடி வருகின்றனர்.
அட்டாக் மோடில் இணையவாசிகள்
While we have been excellent in white- ball cricket.
— Venkatesh Prasad (@venkateshprasad) November 16, 2025
We can’t call ourselves a top Test side with such planning.
Selections without clarity and over-tactical thinking are backfiring. Poor results over a year in tests barring a drawn series in England. . #IndvsSA
- 8781 Test runs (2x than Gambhir)
— 𝗔𝗔𝗥𝗔𝗩 (@Welestium) November 16, 2025
- 8 Years of Coaching Experience
But BCCI sidelined VVS Laxman because Gautam Gambhir was BJP member. pic.twitter.com/6nOBzgKZ5q
- Dropped Shami.❌
— VIKAS (@Vikas662005) November 16, 2025
- Forced retirement of Virat & Rohit❌
- Dropped Ashwin.❌
- Dropped Shreyas Iyer ❌
- Dropped Sarfaraz Khan ❌
Is Gautam Gambhir is worst Head Coach of team India history ?
India loss 4 test match in lasts 6 test 🤯 pic.twitter.com/rCHV1WpZIS
கம்பீருக்கு நோ சொல்லும் ரசிகர்கள்:
நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்ளூரில் டெஸ்ட் தொடரை இழந்தது, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் தோல்வி ஆகியவற்றை தொடர்ந்து தற்போது தென்னாப்ரிக்காவிடமும் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது. இதனால் ஏற்கனவே கம்பீருக்கு எதிராக இருந்த ரசிகர்களின் குரல் மேலும் வலுவடைந்துள்ளது. இந்திய அணிக்காக கடுமையாக உழைத்த, திறமையான பல வீரர்கள் இருக்கையில், ஐபிஎல் கோப்பையை மட்டுமே கருத்தில் கொண்டு கம்பீரை பயிற்சியாளராக்கியது நியாயமல்ல. வீரராகவும், பயிற்சியாளராகவும் நன்கு அனுபவம் வாய்ந்த நபரை, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Gautam Gambhir & Ajit Agarkar destroyed Indian Test Cricket with their ego, hate & favouritism!!
— Rajiv (@Rajiv1841) November 16, 2025
- Dropped Sarfaraz Khan from test setup when he scored 150+ in his last test series.
- Dropped Sai Sudarshan from XI when he scored 87 & 39 in last twst match.
- Dropped Abhimanyu… pic.twitter.com/RINjqZKWv9
Team batting பாருங்களே
— ᥬ🦁 No.7 🦁᭄ (@Gods_Ruleee) November 14, 2025
Rahul Jaiswal Gill(தண்டம்) அடுத்து பன்ட் வந்துர்ரான். அடுத்து வாஷி,அக்சர்,ஜட்டு,ஜீரல்
என்ன எழவு டெஸ்ட் டீம் இது.
2 பேர் தான் proper batsman https://t.co/5Gz5pKpGqt




















