IND Vs WI 3rd T20: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்.. பேட்டிங் செய்ய முடிவு; தொடரை தக்கவைக்குமா இந்தியா?
IND Vs WI 3rd T20: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
IND Vs WI 3rd T20: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம்:
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. அதில், முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியைச் சந்தித்தது. இதனால், தொடரில் 2-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகிக்கிறது.
3வது டி-20 போட்டி:
இந்நிலையில் தான் 3வது டி-20 போட்டி, புரொவிடன்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற மேற்கிந்திய தீவுகள் அணியும், இன்றைய போட்டியில் வென்று தொடரில் நீடிக்க இளம் இந்திய அணியும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால், 2016ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக அந்த அணி வெல்லும் முதல் தொடராக இது இருக்கும்.
A look at our Playing XI for the game.
— BCCI (@BCCI) August 8, 2023
Yashasvi Jaiswal comes in for Ishan Kishan and Kuldeep Yadav replaces Ravi Bishnoi in the XI.
Live - https://t.co/GxrXmVGlOm…… #WIvIND pic.twitter.com/5k1bDBlXqj
இந்திய அணியில் இளம் வீரரான யஷ்ஸ்வி ஜெயிஸ்வால் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகிறார்.
இந்தியா பிளேயிங் லெவன்: சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார்
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல்(கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரொமாரியோ ஷெப்பர்ட், ரோஸ்டன் சேஸ், அக்கேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்