மேலும் அறிய

World Cup 2023: நிலத்தடி நீரை பயன்படுத்திய 20 கிரிக்கெட் ஸ்டேடியங்கள்.. அனுப்பப்பட்ட நோட்டீஸ்.. அப்போ! உலகக்கோப்பை?

கிரிக்கெட் ஸ்டேடியங்களை பராமரிக்க நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு எதிரான விண்ணப்பத்தைப் பெற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம், ஜல் சக்தி அமைச்சகத்திடம் நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொண்டது.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 20 கிரிக்கெட் ஸ்டேடியங்கள் அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது கண்டறியப்பட்டது. இதற்காக இந்த ஸ்டேடியங்கள் நிலத்தடி நீரை எடுப்பதற்கான ஆட்சேபனை சான்றிதழ்களை (என்.ஓ.சி) பெறவில்லை என தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, ஜல் சக்தி அமைச்சகம் (MoJS) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) சமர்ப்பித்த அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியங்களை பராமரிக்க நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு எதிரான விண்ணப்பத்தைப் பெற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம், ஜல் சக்தி அமைச்சகத்திடம் நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொண்டது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள சுமார் 26 கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவற்றில் 24 ஸ்டேடியங்கள் போர்வெல்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. 

நல்ல விஷயம் என்னவென்றால், பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம், நாக்பூரில் உள்ள வி.சி.ஏ ஸ்டேடியம், ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட நான்கு ஸ்டேடியங்கள் மட்டுமே என்ஓசி பெற்றுள்ளனர். 

புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம் ஆகியவை நிலத்தடி நீரை எடுப்பதற்கு என்ஓசி பெறவில்லை.

கடந்த ஜூன் 27ம் தேதி 20 ஸ்டேடியங்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், “சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து ஏன் என்ஓசி கோரப்படவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கவேண்டும்” என உத்தரவிட்டது. தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் ஜல் சக்தி அமைச்சகம் மூன்று மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவ கிரிக்கெட் சங்கங்களை கேட்டுக் கொண்டது.

இதற்கிடையில், ஜூன் மாதம், மத்திய நிலத்தடி நீர் ஆணையம் NOC பெறாததற்காக 20 மைதானங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினாலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதற்கு ஏன் அபராதம் விதிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

eden gardens | Eden Garden has been the gift to Calcutta from Miss Eden  dgtl - Anandabazar

முன்னதாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் (STPs) சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துதல் மற்றும் நிலத்தடி நீரை நிரப்ப உதவும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவுதல் போன்ற மாற்று வழிகள் இல்லாமல் கிரிக்கெட் மைதானங்களின் பராமரிப்புக்காக நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு எதிராக NGT முன் ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர் பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் வணிக மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஐபிஎல் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் விண்ணப்பதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆய்வு உட்படுத்தப்பட்டதா என்பது இதுவரை தெரியவில்லை. இந்த 20 ஸ்டேடியங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும் வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்கும் உலகக் கோப்பைக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிகிறது. இந்த பசுமை தீர்ப்பாயம் சொன்ன விஷயங்களை செய்தாலே போதுமானது. 

இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், சென்னை, தர்மஷாலா, லக்னோ, புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 10 மைதானங்களில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget