Virat Kohli : இவர்கள் இல்லையேல் இது சாத்தியம் இல்லை... இந்தியாவின் முக்கிய மூன்று தூண்களை அறிமுகம் செய்த கோலி..!
391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 166 ரன்களும், சுப்மன் கில் 116 ரன்களும் எடுத்தனர்.
391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
இந்தநிலையில், இந்த போட்டியின் வெற்றிக்குபிறகு சதமடித்த விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் நாங்கள் சதமடிக்க இவர்கள் மூவர்தான் காரணம் என்று இந்தியாவின் த்ரோ டவுன் நிபுணர்களான த்ரோ டவுன் நிபுணர்களான டி. ராகவேந்திரா, நுவான் செனவிரத்னே மற்றும் தயானந்த் கரானி ஆகியோர் ஒரு பேட்டியில் அறிமுகம் செய்தனர்.
.@imVkohli & @ShubmanGill reflect on the efforts put behind the scenes, courtesy this trio of throwdown specialists 👏 👏
— BCCI (@BCCI) January 16, 2023
You wouldn't want to miss this sneak peek into #TeamIndia's backstage heroes 👍 👍 - By @ameyatilak
Special Feature 🎥 🔽 #INDvSLhttps://t.co/SFYQKgKkW2 pic.twitter.com/zY0g2pjJHI
அப்போது சுப்மன் கில்லுடன் பேசிய விராட் கோலி, இது ரகு, தயா, நுவான் -பல ஆண்டுகளாக மூன்று வடிவத்திலும் எனது முன்னேற்றத்திற்கு இவர்கள் மூவரும்தான் காரணம். இவர்கள் மூவரும் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு முறையும் உலகத்தரம் வாய்ந்த பயிற்சியை எங்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்கள் 145 அல்லது 150 கிமீ வேகப்பந்து வீச்சாளர்களைப் போல வலைகளில் நமக்கு சவால் விடுகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் எங்களை அவுட்டாக்க முயற்சிக்கிறார்கள். தினந்தோறும் எங்களை பேட் செய்ய சோதிக்கிறார்கள்.
Stars on the field introduce stars behind the scenes 👌👌
— BCCI (@BCCI) January 15, 2023
𝙎𝙥𝙚𝙘𝙞𝙖𝙡 𝙁𝙚𝙖𝙩𝙪𝙧𝙚: Centurions @imVkohli & @ShubmanGill thank #TeamIndia's throwdown specialists after ODI series win in Trivandrum 👏 👏 #INDvSL
Coming 🔜 on https://t.co/Z3MPyeL1t7 ⏳ pic.twitter.com/V39THYUfpr
சில நேரங்களில் அத்தகைய சோதனை மிக தீவிரமாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை, நான் கிரிக்கெட் வீரராக இருந்த இடத்திலிருந்து இந்த மாதிரியான பயிற்சியை தொடங்கி, தற்போது இந்த இடத்தில் இருக்கிறேன்.
எங்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளதால் இவர்களுக்கு நாங்கள் நிறைய நன்றி கடன் பட்டுள்ளோம். இதன் காரணமாகவே இவர்களின் பெயர்களையும் முகங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால், எங்கள் வெற்றிக்குப் பின்னால், இவர்களின் நிறைய முயற்சிகள் உள்ளது.” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சுப்மன் கில், “இந்த மூவரும் இணைந்து 1200 முதல் 1500 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்கள். போட்டிக்கு செல்லும் அனைத்து வகையான சூழ்நிலைகளுக்கும் அவர்கள் எங்களை தயார்படுத்துகிறார்கள்.” என தெரிவித்தார்.