IND vs SA: நாளை முதல் டி20 போட்டி... இதுதான் பிட்ச்: எப்படி இருக்க போகுது மேட்ச்..!
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டி20 போட்டி நாளை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் இப்போட்டி ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் உலகில் திருவிழாவாக பார்க்கப்படும் ஐபிஎல் தொடர் கடந்த மே 29 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மீண்டும் சர்வதேச போட்டிகள் முழு வேகத்தில் நடைபெற தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டி20 போட்டி நாளை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Snapshots from #TeamIndia's training session ahead of the 1st T20I against South Africa.#INDvSA @Paytm pic.twitter.com/wA8O1Xr0i7
— BCCI (@BCCI) June 8, 2022
இதனை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் புகைப்படங்களும் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இந்த தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தினேஷ் கார்த்திக்,ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்கு திரும்பியுள்ளதால் இப்போட்டி ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை 6 டி20 போட்டிகள் மட்டுமே இங்கு நடந்துள்ளது. இதில் இந்தியா 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. அதில் ஒன்றில் வெற்றியும், மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த மைதானம் மிகவும் வறண்டு இருக்கும் எனவும், இதனால் ரன் குவிப்பது சிரமம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட ரன்களின் சராசரியே 156 மட்டும் தான். இதேபோல் 159 ரன்கள் தான் அதிகப்பட்சமாக சேஸ் செய்யப்பட்ட ரன்னாகும். இதேபோல் பந்துவீச்சாளர்களுக்கும் இது கடினமாக பிட்ச் ஆகவே பார்க்கப்படுகிறது. காரணம் இந்த மைதானத்தில் விக்கெட் எடுத்தவர்களின் டாப் 10 பட்டியலில் 6 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் இதனால் வேகம், சுழற்பந்து வீச்சு எது எடுபடும் என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.
எது, எப்படியோ நாளைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் போராடும் என்பதால் பரபரப்பு பஞ்சமில்லாமல் இப்போட்டி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்