மேலும் அறிய

IND vs SA 1st ODI LIVE Score: போராடித் தோற்ற இந்தியா! சஞ்சு சாம்சனின் முயற்சி வீண்!

IND vs AUS, 1st ODI, Ekana Sports City: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடித் தோற்றுள்ளது.

LIVE

Key Events
IND vs SA 1st ODI LIVE Score: போராடித் தோற்ற இந்தியா! சஞ்சு சாம்சனின் முயற்சி வீண்!

Background

IND vs SA 1st Oneday: இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றதற்கு பிறகு, ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 

இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 3.45 மணிக்கு லக்னோவில் தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக தாமதமாக போட்டி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்தியா தென் ஆப்ரிக்க அணிகள், இது வரை 87 போடிகளில் நேரடியாக மோதியுள்ளன. இதில் இந்திய அணி 35 போட்டிகளிலும், தென் ஆப்ரிக்க அணி 49 போட்டிகளிலும் வென்றி பெற்றுள்ளன. மூன்று ப்போட்டிகள் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த போட்டிகளில், இந்தியாவில் நடந்த போட்டிகளில் மட்டும் இந்திய அணி  15 போட்டிகளில் வென்றுள்ளது. அதேபோல், இந்தியாவில் நடந்த போட்டிகளில் தென் ஆப்ரிக்கா அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் போட்டிங்கை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி மிகவும் நிதானமாக விளையாடி வந்தது. சீரான இடைவெளில் விக்கெட்டுகள் விழுந்து வந்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய  குயிண்டன் டி காக் அரை சதம் அடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ரவி பிஷ்னாய் பந்து வீச்சில் எல்.பி.டபுள்யூ ஆகி, 54 பந்துக்ளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

மிகவும் நிதானமாக விளையாடி வந்த தென் ஆப்ரிக்க அணி சார்பில் முதல் சிக்ஸரை ஐந்தாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேவிட் மில்லர் போட்டியின் 25 ஓவரில் அடித்தார். மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  தென் ஆப்ரிக்க அணி நான்கு  விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் மோசமான ஃபீல்டிங் மற்றும் பவுலிங்கால் ஆரம்பத்தில் தடுமாறி வந்த தென் ஆப்ரிக்க அணி அதன் பின்னர் வலுவான நிலைக்கு வந்தது. 

தென் ஆப்ரிக்க அணியைப் பொறுத்தமட்டில் குயிண்டன் டி காக் 48 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும், க்லாசென் 74 ரன்களும் எடுத்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில், சர்ஹுல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், ரவி பிஷ்னாய் மற்றும் குல்தீப் சிங் யாதாவ் தலா  ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இந்தியாவுக்கு 250 ரன்கள் இலக்கினை தென் ஆப்ரிக்கா நிர்ணயித்துள்ளது. 40 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் விளாசியுள்ளது. ஐந்தாவது விக்கெட்டிற்கு கை கோர்த்த மில்லர் மற்றும் க்லாசென் அதிரடியாக விளையாடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். 

40 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது. முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் பந்துகளை வீணடித்து வெளியேறினர். ஐந்தாவது விக்கெட்டுக்கு கை கோர்த்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. அதிரடியாக அரைசதம் கடந்த ஸ்ரேயஸ் உடனே அவுட் ஆனார். 

அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற போராடிய சஞ்சு சாம்சனின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. பரபரப்பான கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அதில் சஞ்சு சாம்சன் 20 ரன்கள் எடுத்து அணியின் தோல்வி வித்தியாசத்தினை 9 ரன்களாக குறைத்தார். சஞ்சு சாம்சன் கடைசிவரை களத்தில் நின்று 63 பந்தில் 86 ரன்கள் குவித்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. 

தென் ஆப்ரிக்காவின் நிகிடி 3 விக்கெட்டுகளும், ரபாடா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். 

09:08 AM (IST)  •  07 Oct 2022

தி.மு.க. தலைவர் பதவிக்கு இன்று மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல்

தி.மு.க. தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். 

22:50 PM (IST)  •  06 Oct 2022

சஞ்சுவைக் கண்டு அஞ்சிய தெ. ஆ; 10 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது இந்தியா!

பரபரப்பன 40வது ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அதில் 20 ரன்கள் எடுத்தது இந்தியா. இந்த போட்டியில் போராடித் தோற்றுள்ளது. 

22:43 PM (IST)  •  06 Oct 2022

சஞ்சுவைக் கண்டு அஞ்சிய தெ. ஆ; 10 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது இந்தியா!

பரபரப்பன 40வது ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அதில் 20 ரன்கள் எடுத்தது இந்தியா. இந்த போட்டியில் போராடித் தோற்றுள்ளது. 

22:36 PM (IST)  •  06 Oct 2022

கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை; களத்தில் இருக்கும் சஞ்சு சாம்சன் என்ன செய்ய போகிறார்.?

கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைபடுகிறது.  களத்தில் இருக்கும்  சஞ்சு சாம்சன் என்ன செய்ய போகிறார் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

22:29 PM (IST)  •  06 Oct 2022

பரபரப்பான 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள்!

பரபரப்பான 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்தியா மீண்டும் தடுமாற்றம் அடைந்துள்ளது. வெற்றி பெற இரண்டு ஓவர்களில் 37 ரன்கள் அடிக்க வேண்டும். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
School Education: முதல்வர் தலைமையில் நவ.8 பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்; புதிய திட்டங்கள் உண்டா?
School Education: முதல்வர் தலைமையில் நவ.8 பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்; புதிய திட்டங்கள் உண்டா?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
TVK On CM Stalin: விஜயை ஒருமையில் சாடிய சிஎம் ஸ்டாலின், ஓப்பனாக அடித்து பேசிய தவெக - திமுகவிற்கு சவால்
TVK On CM Stalin: விஜயை ஒருமையில் சாடிய சிஎம் ஸ்டாலின், ஓப்பனாக அடித்து பேசிய தவெக - திமுகவிற்கு சவால்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
School Education: முதல்வர் தலைமையில் நவ.8 பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்; புதிய திட்டங்கள் உண்டா?
School Education: முதல்வர் தலைமையில் நவ.8 பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்; புதிய திட்டங்கள் உண்டா?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
TVK On CM Stalin: விஜயை ஒருமையில் சாடிய சிஎம் ஸ்டாலின், ஓப்பனாக அடித்து பேசிய தவெக - திமுகவிற்கு சவால்
TVK On CM Stalin: விஜயை ஒருமையில் சாடிய சிஎம் ஸ்டாலின், ஓப்பனாக அடித்து பேசிய தவெக - திமுகவிற்கு சவால்
Lokesh Kanagaraj : ஒரே படத்தில் ரஜினி கமல்...நிறைவேறாமல் போன லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்
Lokesh Kanagaraj : ஒரே படத்தில் ரஜினி கமல்...நிறைவேறாமல் போன லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்
நெல்லையில் சாதி கொடூரம்: சிறுவனை வீடுபுகுந்து வெட்டிய கும்பல்? களத்தில் இறங்கிய காவல்துறை .! 
நெல்லையில் சாதி கொடூரம்: சிறுவனை வீடுபுகுந்து வெட்டிய கும்பல்? களத்தில் இறங்கிய காவல்துறை .! 
US Election 2024: டிரம்ப் Vs கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்? சிக்கல் என்ன?
US Election 2024: டிரம்ப் Vs கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்? சிக்கல் என்ன?
Mudhalvar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
Mudhalvar Marundhagam: ரூ.3 லட்சம் மானியம்..! தமிழக அரசின் 1000 “முதல்வர் மருந்தகங்கள்”, விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget