மேலும் அறிய

இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!

தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா செய்து ஆட்சியை பிடித்து விட்டார்.

சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை, அதிமுகவினர் சிறையிலிருந்து வெளியே வந்தால் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள் என்றார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

அதிமுகவினர் பனங்காட்டு நரி

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து நேற்று மதுரை மாநகர் அதிமுக சார்பில் செல்லூர் 60 அடி சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில் " உங்கள் அப்பனையே பார்த்தவர்கள், கலைஞரின் அடக்குமுறையை எதிர்த்து போராடி 31 ஆண்டுகள் நல்லாட்சியை தமிழக மக்களுக்கு அளித்துள்ளோம், அதிமுகவினர் பனங்காட்டு நரி, யாருக்கும் அஞ்ச மாட்டோம்.

செல்லூர் ராஜூ கைது

தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா செய்து ஆட்சியை பிடித்து விட்டார். அதிமுக ஆட்சியில் 24,000 போராட்டங்கள் நடந்துள்ளன.  அதிமுக ஆட்சியில் இருந்த சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கே போனார்கள்? அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்த நடிகர் சூர்யா எங்கே சென்றார்? திமுக ஆட்சிக்கு எப்போது வந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி சொன்ன "சார்" என்பவர் யார்?, "சார்" எனும் நபரை காப்பற்ற திமுக அரசு கபட நாடகம் நடத்துகிறது” என பேசினார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றதை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து  அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கட்சிகளின் மக்களை சந்திப்பது ஓட்டை கப்பலில் பயணம் செய்வது போல இருக்கும் என மதுரையில் செல்லூர் ராஜு விமர்சனம்

 செல்லூர் ராஜூ உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில்...,” "மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு அதிமுகவினர் அகிம்சை வழியில் போராடினோம், ஆனால் காவல்துறை எங்களை குற்றவாளிகளை போல கைது செய்தது. அதிமுகவின் எழுச்சியை கட்டுப்படுத்தும் விதமாக திமுக அரசு மாணவிக்கு நீதி கேட்ட அதிமுகவினரை கைது செய்திருக்கிறதுழ் திமுக அரசின் கைது நடவடிக்கைக்கு அதிமுக என்றும் பயப்படாது.

திமுக கூட்டணி கட்சிகள் அடிமைக்கும் அடிமையாக செயல்படுகிறது

தமிழக மக்களுக்கு உண்மையான விடியலை தருவதற்காக அதிமுக களப்பணிகளை செய்து வருகிறது.
பல்கலைக்கழக மாணவிக்காக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை தானே வருத்திக்கொண்டு போராடி உள்ளார். தன்னை வருத்திக் கொண்டு போராடிய அண்ணாமலையின் போராட்டம் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை திமுக கூட்டணி கட்சிகள் அடிமைக்கும் அடிமையாக செயல்படுகிறது. மாணவிக்காக சிபிஎம் கட்சியின் அறிக்கை தவிர திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கட்சிகள் மக்களை சந்திப்பது ஓட்டை கப்பலில் பயணம் செய்வது போல இருக்கும்.

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மது விற்பனையில் 15 சதவீதம் கமிஷன் தொகை  கொடுக்க வேண்டும் என எழுதப்படாத சட்டம் உள்ளது. ஒரு கோடி மது விற்பனைக்கு 15 இலட்ச ரூபாய் கமிஷன் தொகை தர வேண்டும். சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை, அதிமுகவினர் சிறையிலிருந்து வெளியே வந்தால் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள்" என பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
L Murugan:
L Murugan: "பெண்கள் சாலையில் நடக்க முடிவதில்லை" பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை -எல்.முருகன் ஆவேசம்.
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
Embed widget