Breaking News LIVE: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: வேண்டப்பட்டவரை காப்பாற்ற அமைச்சர்கள் முயற்சி - EPS குற்றச்சாட்டு
Breaking News LIVE 31st December 2024: நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
LIVE
Background
2024ம் ஆண்டின் கடைசி நாள் இன்று என்பதால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் தயார்
இன்று மாலை முதல் களைகட்டும் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம்
தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸ்
ஸ்பேட் எக்ஸ் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட் - வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்
ஸ்பேட் எக்ஸ் ஏ, ஸ்பேட் எக்ஸ் பி செயற்கைக்கோள்கைகளை இணைக்கும் பணி ஜனவரி 7ம் தேதி தொடங்கும்
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலை, மேம்பாலங்கள் இன்று இரவு மூடல்
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் கடலில் இறங்கத் தடை - சென்னையில் மட்டும் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் போலீசார்
பைக் ரேஸ், இரு சக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - சென்னை போலீஸ் எச்சரிக்கை
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் இன்றும் விசாரணை
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; தேசிய மகளிர் ஆணைய குழுவினர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு
கன்னியாகுமரியில் இன்று நடக்கிறது திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா; விவேகானந்தர் மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடு முழுவதும் உள்ள அனைத்து முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு ரூபாய் 1630 கோடி
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுட 931 கோடி ரூபாயுடன் முதலிடம்
கேரளா ஒரு மினி பாகிஸ்தான் என விமர்சித்த மகாராஷ்ட்ரா பா.ஜ.க. அமைச்சர் - பெரும் சர்ச்சை
சீமான் மைக் முன்புதான் புலி. மற்ற இடத்தில் எலி - திருச்சி எஸ்.பி.வருண்குமார்
அதிஷியை தற்காலிக முதல்வர் என்று அழைப்பது வேதனையளிக்கிறது - டெல்லி துணை நிலை ஆளுநர் சக்ஷேனா
அரசில் அங்கம் வகிக்கும் அனைவரும் தற்காலிகமானவர்களே - டெல்லி முதலமைச்சர் அதிஷி ஆளுநருக்கு பதிலடி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாப தோல்வி
மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்: வேண்டப்பட்டவரை காப்பாற்ற அமைச்சர்கள் முயற்சி - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவரை காப்பாற்ற பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டம்: பைக் ரேசில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல்
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேசில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று திருச்சி காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டம்: பைக் ரேசில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல்
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேசில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று திருச்சி காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை இன்று திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டு இன்று விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலைக்கு இடையே கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
புத்தாண்டு கொண்டாட்டம்; சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல்
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை