மேலும் அறிய
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
நடிகர் சூரியின் அம்மன் உணவகம் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட கூடுதலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உணவகம் அருகில்
Source : whats app
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள நடிகர் சூரியின் குடும்பத்தினரின் உணவகமான அம்மன் உணவகத்தில் பெருச்சாளி, கரப்பான் பூச்சி இருக்கும் செப்டிங்டேங்க் அருகே உணவு தயாரித்து சுகாதாரமற்ற நிலையில் செயல்படுவதாக கூறி உணவகத்திற்கு சீல்வைக்க கோரி வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் அளித்ததாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது.
மதுரையில் இயங்கும் உணவகம்
மதுரையை சேர்ந்த பிரபல நடிகர் சூரியின் குடும்பத்தினருக்கு சொந்தமான உணவகமான அம்மன் உணவகம். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. பொதுப்பணி துறை ஒப்பந்தம் மூலம் கடந்த ஜூன் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொதுப்பணி துறையினரால் 434 சதுரடி பரப்பு மட்டுமே அம்மன் உணவகம் செயல்பட அனுமதி வழங்கபட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அம்மன் உணவக நிர்வாகத்தினர் செவிலியர் விடுதியில் கழிவுநீர் தொட்டி அமைந்திலுள்ள இடத்தில் விதிமுறைகளை மீறி கூடுதலாக 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தும், 360 சதுர அடி திறந்தவெளி ஆக்கிரமிப்பும் செய்துள்ளதாக கூறி வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான முத்துக்குமார் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
புகார் மனு
அந்த மனுவில் அம்மன் உணவகத்தின் அருகே அமைந்துள்ள 10க்கும் மேற்பட்ட கழிவுநீர் தேங்கும் செப்டிக் டேங்க்குகளின் நடுவேதான் காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், உணவு பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகள் இரவு பகலாக நடந்து வருவதாகவும், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் வசிக்கும் இடமாக அந்த இடம் அமைந்துள்ளது என கூறியும், செவிலியர் விடுதியின் ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து மினரல் வாட்டர் கேன்கள் நிறைந்த அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்திருப்பதால் அங்கு தங்கியிருக்கும் செவிலியர் மற்றும் செவிலிய ஆசிரியைகள் ஜன்னலை திறக்க முடியாமல் எப்பொழுதும் மூடியே வைத்துள்ளனர்.
இதனால் அங்கு தங்கியுள்ள செவிலிய மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், அம்மன் உணவகத்தின் அருகில் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது. இதனால் கழிவு நீர் தொட்டிகளின் நடுவிலும், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்திலும் சுகாதாரமில்லாமலும், தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது எனவும்,
சீல் வைக்க வேண்டும்
இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக பொதுப்பணி துறையின் ஒப்பந்த முறைகளை மீறி முழு ஆக்கிரமிப்பு செய்தும், சுகாதாரமற்ற முறையிலும் தரமற்ற வகையில் உணவுகளை தயாரித்து கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் அம்மன் உணவகத்தில் அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்து சீல் வைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நடிகர் சூரியின் உணவகமான அம்மன் உணவகம் சுகாதரமற்ற முறையில் இருப்பதாகவும் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் கூறி உணவகத்திற்கு சீல் வைக்க கூறி சமூக ஆர்வலர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நடிகர் சூரியின் உணவகமான அம்மன் உணவகம் சுகாதரமற்ற முறையில் இருப்பதாகவும் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் கூறி உணவகத்திற்கு சீல் வைக்க கூறி சமூக ஆர்வலர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இது குறித்து பேசிய சமூக ஆர்வலர் முத்துக்குமார்...,” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன்’ என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement