மேலும் அறிய

Jasprit Bumrah: ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக யார்? கடும் போட்டியில் 4 இந்திய பந்துவீச்சாளர்கள்..!

ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் விளையாடும் பதினொன்றில் யார் இடம் பெறுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி ராஞ்சியில் வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. ராஞ்சியில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக விளையாடும் பதினொன்றில் யார் இடம் பெறுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால், இந்த போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து பணிசுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டார். ஐந்தாவது டெஸ்டில் விளையாடுவாரா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை.  நான்காவது டெஸ்ட் போட்டியின் முடிவுக்குப் பிறகு அதுகுறித்த முடிவு எடுக்கப்படும். நான்காவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், ஐந்தாவது டெஸ்டிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முடிவு எதிர்மாறானால் பும்ரா ஐந்தாவது டெஸ்டில் விளையாடுவார். தொடர்ந்து விளையாடி வருவதால் பணிச்சுமையை காரணமாக நான்காவது டெஸ்டில் பும்ராவுக்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளது. 

பும்ராவுக்கு பதிலாக 4 பந்துவீச்சாளர்கள் போட்டி: 

பும்ராவை விடுவித்த பிறகு, முகேஷ் குமார் மீண்டும் இந்திய அணியில் அழைக்கப்பட்டுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன், ரஞ்சி போட்டியில் விளையாடுவதற்காக முகேஷ் குமார் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து ரஞ்சி போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடும் போது, ​​முகேஷ் குமார் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தற்போது மீண்டும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர இந்தியா-ஏ அணிக்காக சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் தீப்பும் தனது அறிமுகத்திற்காக காத்திருக்கிறார். அதேசமயம், இங்கிலாந்துக்கு எதிரான ராஞ்சியில் நடைபெறும் போட்டியின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நான்காவது டெஸ்டில் அதிகமாக சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாம். இதன் காரணமாக இந்திய அணி ஆடும் லெவனில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கே இடம் கொடுக்கலாம்.  இது நடந்தால் பும்ராவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்ஷர் படேல் இடம் பெறுவார்கள். 

முகேஷ் குமார், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் படேல் என நான்கு வீரர்களில் யார் ப்ளேயிங் 11ல் விளையாடுவார். ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக கேப்டன் ரோஹித் சர்மா விளையாடும் பதினொன்றில் யாருக்கு வாய்ப்பை தருவார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

நான்காவது டெஸ்ட் போட்டி

இந்திய அணி: 

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல்,ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாக் க்ராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஒல்லி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட்சன் , மார்க் வூட்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget