Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Ind vs Aus 2nd Test : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 19 ரன்கள் இலக்கை 3 ஓவர்களில் அடித்து முடித்தனர்.
அடிலெய்டு டெஸ்ட்:
அடிலெய்டு ஓவலில் நடந்த இந்த போட்டியில், ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து , ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்தது. தொடரின் தொடக்க ஆட்டத்தில் 295 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா வலுவாக பதிலடி கொடுத்தது.
முதல் இன்னிங்ஸ்: இந்தப்போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் இந்திய அணி 180 ரன்களுக்கு சுருண்டது. மிட்செல் ஸ்டார்க் 48 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவில் ஹெட்டின் அபார சதத்தால் 157 ரன்கள் முன்னிலை பெற்றது. டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்தார்.
இதையும் படிங்க: WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
இரண்டாவது இன்னிங்ஸ்: இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய இந்திய அணி சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 128-5 எடுத்து இருந்தது. இந்த நிலையில் இந்தியா 3 ஆம் நாள் முதல் ஓவரிலேயே ரிஷப் பந்தை இழந்தது, ஸ்டார்க் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித்திடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானர். நிதீஷ் ரெட்டியும், ஆர்.அஷ்வினும் அணியை சரிவில் இருந்தும் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து மீட்க போராடினர். கம்மின்ஸ் தனது ஷார்ட்-பால் உத்திகளைத் தொடர்ந்து அஷ்வின் மற்றும் ஹர்ஷித் ராணா மற்றும் ரெட்டி ஆகியோரை வெளியேற்றினார், சிறிது நேரத்தில் நிதிஷ் ரெட்டியும் வெளியேற போலந்து இந்தியாவின் கடைசி விக்கெட்டாக முகமது சிராஜை எடுத்தார். ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
Game over! Australia level the series 💪#AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurance pic.twitter.com/7djgXWBfg7
— cricket.com.au (@cricketcomau) December 8, 2024
ஆஸ்திரேலியா வெற்றி:
19 ரன்கள் என்கிற இலக்கை ஆஸ்திரேலிய அணி 3 ஒவர்களில் எடுத்து வெற்றி பெற்றது, ஆட்ட நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்கிற கணக்கில் சமன் செய்தது ஆஸ்திரேலிய அணி.
Series level. One-all.
— cricket.com.au (@cricketcomau) December 8, 2024
An emphatic victory for Australia in Adelaide #AUSvIND pic.twitter.com/oR8OqesU5O
இவ்விரு அணிகளுக்கான இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 14 ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைப்பெறவுள்ளது.