Jasprit Bumrah: அடுத்த கேப்டன் பும்ரா தான்.. அடித்துச் செல்லும் பாகிஸ்தான் வீரர்!
சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்கு புதிய கேப்டனாக வரும் வாய்ப்பு பும்ராவிற்கு இருப்பதாக கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி.
கேப்டன் பதவிக்கு ஆசை படும் பும்ரா:
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் ஓய்வில் இருக்கின்றனர். இதனைத்தொடஅண்மையில் இலங்கையில் நடைபெற்ற டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் ஓய்வில் இருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்ஷி குறித்து பேசியிருந்தார். அதில்,"பந்து வீச்சாளர்கள் புத்திசாலிகள் என்று நான் கருதுகிறேன். ஏனெனில், அவர்கள் தான் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க வேண்டும்.
பந்து வீச்சாளர்கள் தான் போராட்டக் களத்தில் இருக்கிறோம். ஒரு போட்டியில் தோல்வி ஏற்பட்டால் பந்து வீச்சாளர்களை தான் அனைவரும் குறை சொல்வார்கள். அது மிகவும் கடினமான பணியாகும். கபில் தேவ் நமக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். இதை வைத்துப் பார்த்தாலே பந்துவீச்சாளர்கள் சாதூரியமானவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்"என்று கூறியிருந்தார்.
இச்சூழலில் பும்ராவின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"பும்ராவின் பேச்சை நான் கேட்கும் போது கேப்டன் பதவி மீது பாபர் அசாம் போல் ஆசை வைத்திருக்கிறார் என தெரிகிறது. பும்ரா போன்ற பவுலர்கள் கேப்டன் பதவிக்கு பின்னால் அலையக்கூடாது. உலகத்தரம் வாய்ந்த பவுலராக பும்ரா விளங்குகிறார். அவருடைய கவனம் எல்லாம் பௌலிங் மீது மட்டும் தான் இருக்க வேண்டும்.
புதிய கேப்டனாக கூட வரலாம்:
கபில்தேவ், இம்ரான் கான் போன்ற பவுலர்கள் கேப்டன் பதவியில் இருந்ததாகும் சொல்கிறார். ஆனால் பும்ரா சொன்ன இரண்டு பேருமே ஆல்ரவுண்டர்கள் என்பதை அவர் மறந்து விடக்கூடாது. கபில்தேவும், இம்ரான் காணும் தலைசிறந்த ஆல் ரவுண்டராக இருந்ததால் தான் கேப்டன் பதவிகளும் அவர்கள் ஜொலித்தார்கள். கபில்தேவ், இம்ரான் கான் இருவருமே கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் அணிக்குள் வந்தவர்கள் கிடையாது.
சாதாரண பவுலராக வந்து ஆல் ரவுண்டராக மாறி அதன்பிறகு கேப்டனாக மாறினார்கள். ஒரு பவுலருக்கும் ஒரு ஆல்ரவுண்டருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும் பும்ரா பேசி இருக்கிறார். பாட் கம்மின்ஸ் நல்ல கேப்டனாக இருக்கிறார் ஆனால் அவர்களெல்லாம் அதிவேகமாக தொடர்ந்து பந்து வீசு கூடிய வீரராகவும் இருக்கிறார்கள். அவர்களால் நல்ல பயிற்சியாளராகவும் இருக்க முடியும். பும்ராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்கு புதிய கேப்டனாக கூட வரலாம்" என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி.