Twitter Reacts Bumrah Record : இது கிரிக்கெட் RRR! சச்சின் டெண்டுல்கர் முதல் சாமானியன் வரை...! பும்ராவை கொண்டாடும் ரசிகர்கள்!
இந்திய கேப்டன் பும்ரா ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்து உலக சாதனை படைத்ததற்கு ரசிகர்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் எட்ஜ்பாஸ்டன் நகரில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 29 ரன்களை விளாசினார். அந்த ஓவரில் எக்ஸ்ட்ராக்கள் உள்பட 35 ரன்கள் இந்தியாவிற்கு கிடைத்தது. ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசிய பும்ராவிற்கு டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், இது பும்ராவா? இல்லை யுவராஜ் ஆ..? 2007தான் நினைவுக்கு வருகிறது.
Kya yeh Yuvi hai ya Bumrah!?
— Sachin Tendulkar (@sachin_rt) July 2, 2022
2007 ki yaad dilaa di.. 😍@YUVSTRONG12 @Jaspritbumrah93 #ENGvIND pic.twitter.com/vv9rvrrO6K
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், இந்திய அணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய சிறுவன் ஒருவன் பூம் பூம் பும்ரா என்று ஊக்குவிக்கிறான்.
Well done Skipper Jasprit Bumrah🔥🔥#bumrah #JaspritBumrah #TeamIndia pic.twitter.com/wNv4iOyajw
— Pankaj Chaurasiya (@PankajC76431837) July 2, 2022
மற்றொரு ரசிகர் தனது டுவிட்டர் பக்கத்தில், தன்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
I can't stop my laughing...🤣😂😂
— Suraj Kumar (@surajkumar2894) July 2, 2022
1 over and 35 Runs in a test match 🤣🔥🎊#bumrah
Is the Rock 🔥🔥🔥#ENGvIND pic.twitter.com/yGwm7nkHqW
மற்றொரு டுவிட்டர்வாசி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் ராம்சரண்தேஜாவை யுவராஜ்சிங் என்றும், ஜூனியர் என்.டி.ஆரை பும்ரா என்றும் பதிவிட்டு ஸ்டூவர்ட் ப்ராட் கேரியரில் சோகமான நிகழ்வு என்று பதிவிட்டுள்ளனர்.
#INDvsENG #ENGvIND #Edgbaston#testcricket #Bumrah
— g0v!ñD $#@®mA (@rishu_1809) July 2, 2022
Sad story in career of Stuart Broad 😅
Yuvraj Singh - 36 Runs
Jasprit Bumrah - 35 Runs pic.twitter.com/RYAtdi7c78
மற்றொரு ரசிகர் பும்ராவின் ஆட்டத்தை இங்கிலாந்து ராணி எலிசெபத் பார்த்து ஆச்சரியப்படுவது போல புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Queen of England after Watching Bumrah smash their Legend Stuart Broad (with 550 test wicket) in his own backyard!😜#Bumrah Boom Boom 💥💥💥#INDvsENG pic.twitter.com/HExjaVQ8Xh
— Gautam Jha (@Gautam_jha01) July 2, 2022
யுவராஜ்- தோனி புகைப்படத்தையும், பும்ரா - சிராஜ் புகைப்படத்தையும் பகிர்ந்து கீழே ஸ்டூவர்ட் பிராட் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஒரு ரசிகர் சில விஷயங்கள்தான் மாறியுள்ளது. சில விஷயங்கள் மாறவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
Some things change, some don't.#Bumrah #Broad #Yuvraj #ENGvIND pic.twitter.com/qTBGcVKDii
— Aadya Sharma (@Aadya_Wisden) July 2, 2022
பும்ராவின் சாதனையை கண்டு ஆர்ப்பரிக்கும் விராட்கோலியின் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
Some things change, some don't.#Bumrah #Broad #Yuvraj #ENGvIND pic.twitter.com/qTBGcVKDii
— Aadya Sharma (@Aadya_Wisden) July 2, 2022
டுவிட்டர், பேஸ்புக் என்று பும்ராவின் சாதனையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.