Ashes Test 2023: ஆஷஸ் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்... ஆஸ்திரேலியாவை பழிவாங்குமா இங்கிலாந்து?
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டெஸ்ட் தொடர்களில் ஒன்று ஆஷஸ் தொடர். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இந்த தொடர் உலகளவில் அதிகம் கவனம் பெறும். ஆஷஸ் தொடருக்கென ஒரு வரலாறு உள்ளது. இப்படியான நிலையில் நடப்பாண்டு ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பர்மிங்காமில் கடந்த ஜூன் ஜூன் 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இரண்டு அணியிலும் குறிப்பிட்ட வீரர்களை மற்றவர்கள் பெரிய அளவில் சோபிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதுமட்டுமில்லாமல் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி தோற்றதை அந்த அணியின் ரசிகர்கள் கடுமையான விமர்சித்தனர்.
இப்படியான நிலையில் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் ஆச்சரிமளிக்கும் வகையில் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்திருந்தது. ஒரு வகையில் அதுவே அந்த அணிக்கும் பின்னடைவாக இருந்தது. எனவே தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து அணி களம் காண்கிறது. அந்த அணியில் காயம் காரணமாக விலகியுள்ள மொயீன் அலிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு சேர்க்கப்பட உள்ளார். இதன்மூலம் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆலி ராபின்சன், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்கு என 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் அந்த அணி களமிறங்கிறது.
அதேசமயம் முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி அதனை தொடரும் முனைப்பில் உள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் புற்கள் அதிகம் இருப்பதால் இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் சம பலமாக இருப்பதால் இந்த போட்டியும் கடைசி நிமிடம் வரை அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ‘விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணி.. ஆனால் ஒரு கண்டிஷன்’ - உதயநிதி ஸ்டாலின்