Commonwealth Games 2022 : இந்தியாவிற்கு ஆஹா ஓஹோன்னு அமைந்த 6வது நாள்.. முதல் முறையாக ஸ்குவாஷ், உயரம் தாண்டுதலில் பதக்கம்
ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷில், சவுரவ் கோசல் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோப்பை தோற்கடித்து, காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் முதல் ஒற்றையர் பதக்கத்தை வென்றார்.
Commonwealth Games 2022 Day 6 Highlights: காமன்வெல்த் போட்டியின் 6 வது நாளில் இந்தியாவிற்கு சிறந்த நாளாக அமைந்தது. நேற்றைய நாளில் மட்டும் 4 பதக்கங்களை கைப்பற்றி இருந்தது. மகளிர் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷில், சவுரவ் கோசல் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோப்பை தோற்கடித்து, காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் முதல் ஒற்றையர் பதக்கத்தை வென்றார்.
India's first ever medal in high jump at #CommonwealthGames.
— The Bridge (@the_bridge_in) August 4, 2022
A historic medal for @TejaswinShankar at #CWG2022. pic.twitter.com/OJfMKkqFNK
தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த்தில் இந்தியர் ஒருவர் உயரம் தாண்டுதல் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
Bronze Medal Alert 🚨
— IndiaSportsHub (@IndiaSportsHub) August 4, 2022
And India Wins the 10th Weightlifting Medal at #CWG2022
Gurdeep Singh lifts 167+223 to clinch the Bronze Medal at #Birmingham22
Good Performance by the Lifters pic.twitter.com/fsWLyZhfGI
பளு தூக்குதல் போட்டியில், லவ்பிரீத் சிங் மற்றும் குர்தீப் சிங் ஆகியோர் முறையே ஆண்களுக்கான 109 கிலோ மற்றும் 109+ கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டை வீரர்களான நிகத் ஜரீன் (50 கிலோ), நிது கங்காஸ் (பெண்கள் 48 கிலோ) மற்றும் ஹுசம் உதின் முகமது (ஆண்கள் 57 கிலோ) ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியா மேலும் மூன்று பதக்கங்களை உறுதி செய்தனர். இருப்பினும், ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் தனது லைட் மிடில் வெயிட் காலிறுதியில் தோற்றார், ஆஷிஷ் குமார் ஆண்கள் லைட் ஹெவிவெயிட் காலிறுதியில் தோற்றார்.
TULIKA WINS SILVER 🚨
— IndiaSportsHub (@IndiaSportsHub) August 4, 2022
Tulika Maan lost to Top seed Adlington, but in the Final. She ensured yet another Silver Medal in Judo.
💫Won two good matches to make it to Final
💫Wins India’s 16th medal at #CWG2022 #Judo #CWGindia2022 #Birmingham22 pic.twitter.com/2QhNitkuFQ
முன்னதாக நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா-ஹரிந்தர் பால் சந்து இணை பங்கேற்றது. முதல் சுற்றில் இந்திய ஜோடி இலங்கையின் யெஹேனி- ரவிந்து ஸ்ரீ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கேமை இலங்கை ஜோடி 11-8 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் சுதாரித்து கொண்டு ஆடிய இந்திய ஜோடி 11-4,11- 4 என்ற கணக்கில் அடுத்த இரண்டு கேம்களையும் வென்றது. அத்துடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
Powering through to the semi-finals!
— ICC (@ICC) August 4, 2022
India look in imperious form at #B2022 👀
Scorecard: https://t.co/zsmkwBiAMx pic.twitter.com/ES3AUpRJiL
பார்படாஸ் பெண்கள் அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தமாக 18 பதக்கங்களை வென்றுள்ளது. அத்துடன் இந்திய அணி பதக்கப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்