Badminton Asia Team Championships: மலேசியாவில் வரலாறு படைத்த இந்திய மகளிர்.. ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தல்!
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது பி.வி.சிந்து, காயத்ரி கோபிசந்த் - ட்ரீசா ஜாலி மற்றும் அன்மோல் கராப் ஆகியோர் அந்தந்த ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
![Badminton Asia Team Championships: மலேசியாவில் வரலாறு படைத்த இந்திய மகளிர்.. ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தல்! Badminton Asia Team Championships 2024 Historic Win India Womens Team Won Title 1st Time Defeating Thailand PV Sindhu Anmol Kharb Badminton Asia Team Championships: மலேசியாவில் வரலாறு படைத்த இந்திய மகளிர்.. ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/18/8062662bc7a80a60fe6aa4afecbecd7d1708243133584571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆசியன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
மலேசியாவின் ஷா ஆலமில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்ற ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வென்றது. இதற்கு முன் இந்திய மகளிர் அணி ஒரு பதக்கம் கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
𝐖𝐄 𝐀𝐑𝐄 𝐓𝐇𝐄 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🥹🫶
— BAI Media (@BAI_Media) February 18, 2024
🇮🇳 women’s team has created history 🥳
Proud of you 🫡👑@himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #BATC2024#TeamIndia #IndiaontheRise#Badminton pic.twitter.com/0woUIiCxNK
இறுதிப்போட்டியின்போது பி.வி.சிந்து, காயத்ரி கோபிசந்த் - ட்ரீசா ஜாலி மற்றும் அன்மோல் கராப் ஆகியோர் அந்தந்த ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இதையடுத்து, குரூப் சுற்றில் முதலிடத்தில் இருந்த சீனாவை வீழ்த்தி இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியது.
என்ன நடந்தது இறுதிப்போட்டியில்..?
இறுதிப் போட்டியின்போது, முதல் போட்டியானது பி.வி.சிந்து மற்றும் சுபனிடா கெட்டெதோங் இடையே நடந்தது. காயத்தில் இருந்து மீண்டும் தனது முதல் போட்டியில் விளையாடிய பி.வி.சிந்து, 21-12, 21-12 என்ற கணக்கில் சுபனிடா கெட்டெதோங்கை தோற்கடித்து இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி ஜோடி 21-16, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் ஜோங்கல்பம் கிடிதரகுல் - ரவிந்தா பிரஜோங்ஜல் ஜோடியை தோற்கடித்தது. இதன்மூலம், இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
BACK ON LEVEL TERMS…Thailand and India are back on level terms 2-2 as Aimsaard sisters Benyapa/Nuntakarn defeated India’s Priya Konjengbam/Shruti Mishra 21-11, 21-9 to force a decider in the finals of the #BATC2024 at SCC Hall in Shah Alam today.
— Badminton Asia (@Badminton_Asia) February 18, 2024
#VICTOR #BadmintonAsia #BATC pic.twitter.com/IhymkPy6hq
அதன் பிறகு, அஸ்மிதா சாலிஹா 11-21, 14-21 என்ற கணக்கில் புசானன் ஓங்பாம்ருங்பானிடம் தோல்வியை சந்திக்க நேரிட்டது. பின்னர் இரண்டாவது இரட்டையர் ஆட்டத்தில் ஸ்ருதி-ப்ரியா ஜோடி தோல்வியை சந்திக்க நேரிட்டது, இதனால் ஸ்கோர் 2-2 ஆனது. இதன்பின், 16 வயதான அன்மோல் கராப், தீர்க்கமான ஆட்டத்தில் போர்ன்பிச்சா சோகிவோங்கிற்கு எதிராக 21-14, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவை சாம்பியனாக்கினார். அன்மோலின் உலகத் தரவரிசை 472 ஆகவும், சோகிவோங் 45ஆவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)