Avani Lekhara : உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் தொடர்...! தங்கம் வென்றார் தங்க மங்கை அவனிலேகரா..! ரசிகர்கள் வாழ்த்து மழை..!
பிரான்சில் நடைபெற்ற உலககோப்பை பாரா துப்பாக்கிச்சுடும் தொடரில் இந்தியாவின் அவனிலேகரா தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள சடெராக்ஸ் நகரம். இந்த நகரத்தில் உலகில் உள்ள மாற்றுத்திறனாளி துப்பாக்கிச்சுடும் வீரர்களுக்கான பாரா உலககோப்பை துப்பாக்கிச்சுடும் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் தங்க மங்கை அவனிலேகரா பங்கேற்றுள்ளார்.
இவர் மகளிர்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் 458.3 புள்ளிகள் பெற்று மற்றொரு ஜாம்பவான் வீராங்கனையான ஸ்லோவாகியாவைச் சேர்ந்த வீராங்கனை வெரோனிகாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Another 🥇 for @AvaniLekhara in #Chateauroux2022!
— #ShootingParaSport (@ShootingPara) June 11, 2022
What a performance from the Indian superstar 🤩
She managed an impressive comeback to take the World Cup title from a very experienced Veronika Vadovicova 🇸🇰.#ShootingParaSport pic.twitter.com/aDE2X6Ld4P
பதக்கத்தை கைப்பற்ற வெரோனிகாவிற்கும், அவனிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறி, மாறி முன்னிலை வகித்த நிலையில் கடைசியில் அவனி அசத்தலான வெற்றியை பெற்றார். வெற்றி பெற்ற அவனிலேகராவை மத்திய அமைச்சர் நிதின்கட்காரி, விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
Another Day, Another Golden Performance!!!
— Nitin Gadkari (@nitin_gadkari) June 11, 2022
Golden Girl @AvaniLekhara makes the nation proud with another spectacular victory at #Chateauroux2022
A Billion Hearts Salutes You #NariShakti#ShootingParaSport pic.twitter.com/eIOEQvdY9n
அவனி ஏற்கனே ஜப்பானில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் இந்தியாவிற்காக தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

