IND vs NZ: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து? சேசிங்கில் எட்டிப்பிடிக்குமா இந்தியா?
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் நடந்து வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, சிராஜ் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து பேட்டிங்:
காயத்தில் இருந்து மீண்ட சுப்மன்கில் மீண்டும் கேப்டனாக களமிறங்கியுள்ளார். நியூசிலாந்து அணியை ப்ராஸ்வெல் வழிநடத்துகிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன்கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது. டேவான் கான்வே - ஹென்ரி நிகோல்ஸ் இருவரும் பேட்டிங்கைத் தொடங்கி வருகின்றனர்.
மீண்டும் கோலி, ரோகித்:
நியூசிலாந்து அணிக்கு பேட்டிங்கில் கான்வே, நிகோல்ஸ், வில் யங், டேரில் மிட்செல், கிளென் பிலிஃப்ஸ், மிட்செல் ஹே, ப்ராஸ்வேல் உள்ளனர். இந்திய அணிக்கு பேட்டிங் பலமாக முன்னாள் கேப்டன்கள் ரோகித்சர்மா, விராட் கோலி, கேப்டன் சுப்மன்கில், காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஜடேஜா உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சிற்கு ஜகாரி போல்க்ஸ், கிளார்க், ஜேமிசன், ஆதித்யா அசோக் உள்ளனர். இந்திய அணியில் பந்துவீச்சு பலமாக பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். ஆல்ரவுண்டர்களாக இந்திய அணியில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். நியூசிலாந்து அணியில் ப்ராஸ்வேல், மிட்செல், கிளென் பிலிஃப்ஸ் உள்ளனர்.
இந்திய அணி விவரம்:
ரோகித் சர்மா, சுப்மன் கில் ( கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
நியூசிலாந்து அணி விவரம்:
கான்வே, நிகோல்ஸ், வில் யங், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் ஹே, மைகேல் ப்ராஸ்வேல், ஜகாரி ஃபோக்ஸ், கிரிஸ்டியன் கிளார்க், கைல் ஜேமிசன், ஆதித்யா அசோக்
இந்திய அணியில் மீண்டும் காயத்தில் இருந்து திரும்பிய கேப்டன் சுப்மன்கில், ஸ்ரேயாஸ் ஐயர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். குறிப்பாக, கில் தொடர்ந்து சொதப்பலாக ஆடி வரும் நிலையில் அவரது சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட சுப்மன்கில் தனது திறமையை மீண்டும் வெளிக்காட்ட வேண்டிய தொடராக இந்த தொடர் அமைந்துள்ளது.




















