Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் ஸ்வியாடெக், கீஸ்
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுப் போட்டிக்குள் நுழைந்து, ஸ்வியாடெக் மற்றும் கீஸ் அசத்தியுள்ளனர்.

கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இரண்டு காலிறுதிப்போட்டிகள் முடிந்த நிலையில், இன்று நடந்த மற்ற இரண்டு காலிறுதிப்போட்டிகளில் வென்று, ஸ்வியாடெக் மற்றும் கீஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அபாரமாக ஆடிய ஸ்வியாடெக்
இன்று(22.01.25) நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக், தர வரிசையில் 8-ம் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனையான எம்மா நவார்ரோ உடன் மோதினார். இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக், முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து எதிர் தரப்புக்கு இடம்கொடுக்காமல் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக், இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி, எளிதான வெற்றியை பெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதிக்கு தகுதிபெற்ற மேடிசன் கீஸ்
இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப்போட்டியில், உலகின் 19-ம் நிலையில் உள்ள அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், 28-ம் இடத்தில் உள்ள உக்ரைனிய வீராங்கனை எலினா ஸ்விடோலினாவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டை, ஸ்விடோலினா கைப்பற்றினார். அதற்குப் பின் சுதாரித்து ஆடிய கீஸ், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், 3-6, 6-3, 6-4 என் செட் கணக்கில் வெற்றி பெற்ற கீஸ், அரையிறுதிக்குள் நுழைந்தார். இவர், அரையிறுதிப்போட்டியில், இன்றைய மற்றொரு வெற்றியாளரான ஸ்வியாடெக்குடன் மோதுகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

