மேலும் அறிய
Advertisement
Navratri : அத்திவரதர் கோவிலில் நவராத்திரி உற்சவம்... கோடாலி கொண்டை முடிச்சு அலங்காரத்தில் காட்சி...
நவராத்திரி முன்னிட்டு பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் வரதராஜர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஊஞ்சல் சேவை மற்றும் கோடாலி கொண்டை முடிச்சு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆட்சி அளித்தார்
உலகப் புகழ்பெற்ற ஆதி அத்திவரதர் மக்களால் அன்போடு அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கண்ணாடி அறையில் இருந்து வரதராஜர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைரம் வைடூரியம் உடுத்தப்பட்டு கோடாலி கொண்டை முடிச்சு, அலங்காரத்தில் கோவில் உள்பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 100 கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க பெருமானுக்கு, சிறப்பு நெய்வேதியும் ஆராதனை மற்றும் திவாரதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவர் சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்..
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்தள்ளது. காஞ்சியில் தெற்குப் பகுதி - நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். மூலவர் வரதராஜப் பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிந்து கொண்டுள்ளார். பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார்
வரலாறும் சிற்பக்கலையும்..
இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி.பி. 1053 ல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப் பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. முதலாம், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர்.
பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர். கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்குப் பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாலான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் சுமார் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion