மேலும் அறிய
Advertisement
Vaikunda Ekadasi: வாணியம்பாடியில் 1036 ஆண்டு பழமை வாய்ந்த அழகு பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பு
ஶ்ரீரங்கம் கோவிலில் இருந்து யானை வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பி தரிசனம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டையில் அமைந்துள்ள 1036 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகு பெருமாள் கோயிலில் 58வது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
இந்த ஆலயத்தின் முக்கியமான சிறப்பு திருச்சி ஶ்ரீ ரங்கம் ஆலயத்தின் விமான கோபுரத்தில் அமைந்துள்ள பிரயோக சக்கர பெருமாள் இந்த அழகு பெருமாள் கோயிலில் கருவறையில் அமர்ந்துள்ளார். இந்த அழகு பெருமாள் கோயிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழாவில் திருச்சி ஶ்ரீ ரங்கம் ஆலயத்தின் பசீலா என்ற யானையை வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த யானை கோயிலை 3 முறை சுற்றி வந்து பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்த சொர்க்க வாசல் வழியாக வந்த பெருமாளை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷம் முழங்க வழிபட்டனர்.
மேலும் இந்த கோயில் 1036 ஆண்டுகள் மிகவும் பழமையான கோயில் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
இதோபோல், ஆம்பூர் அருகே வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பிந்து மாதவ திருக்கோவிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி திருப்பெருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் தங்க ஆபரணங்கள் பொன் ஆபரணங்கள் அணிவித்து மற்றும் தலையில் கிரீடம் சூட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் தேரின் மீது சுமந்தபடி கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்கள் எழுப்பி பின்னர் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion