மேலும் அறிய

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான திரி தயாரிக்கும் பணி தொடக்கம்

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான திரி தயாரிக்கும் பணி தொடங்கியது.

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் திருக்கார்த்திகை தீபதிருநாளையொட்டி வருகிற 6ம் தேதி தீபம் ஏற்றுவதற்காக பருத்தி துணிகளைக் கொண்டு திரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருநாளன்று உச்சிபிள்ளையார் கோயில் முன் மெகா திரியை கொண்டு தீபம் ஏற்றுவது வழக்கம். இந்தாண்டு வருகிற 6ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு மாலை 5 மணிக்கு செவ்வந்தி விநாயகர், தாயுமானசுவாமி மற்றும் மட்டுவார்குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன் உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணிகளை கொண்டு 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக திரி தயாரிக்கும் பணிகள் மலைக்கோட்டை கோயிலில் உள்ள தாயுமானவர் சன்னதியில் நேற்று துவங்கியது.

இதனை தொடர்ந்து பெரிய அளவிலான காடா துணியில் திரி நூல்களைக் கொண்டு திரி தயாரிக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த திரியின் உள்ளே பருத்தி கொட்டை வைக்கப்பட்டு 2 மூட்டைகளாக சுற்றி கட்டி, அதனை மலைக்கோட்டையின் உச்சிபிள்ளையார் சன்னதியில் அமைந்துள்ள விளக்கு ஏற்றும் கோபுரத்தில் திரியை வைப்பார்கள். அதன்பின், அதில் நெய், இலுப்பை எண்ணெய் மற்றும் நல்லெண்ணை ஊற்றி கார்த்திகை தீபம் ஏற்றும் நாள் வரை எண்ணெயில் ஊற வைக்கப்படும். பின்னர் முதல் நாள் 15 டின் எண்ணெய் ஊற்றப்பட்டு, பின்னர் ஒவ்வொரு நாள் இடைவெளியில் என மொத்தம் 50 முதல் 70 டின் எண்ணை ஊற்றப்பட உள்ளது. வரும் 6ம் தேதி மாலை 6 மணி அளவில் மெகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget