மேலும் அறிய

கார்த்திகை தீபத்திருவிழா: திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து மாற்றம் 

பேருந்துகள் மேம்பாலங்கள் வழியாக திருப்பரங்குன்றம் செல்ல அனுமதி இல்லை. இப்பேருந்துகள் பைபாஸ் ரோடு வழியாக இயக்கப்படும்

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை திருவிழாவும் ஒன்று. பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கொடியேற்றம் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. திருவிழாவினை ஒட்டி, சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் சுவாமி காலையிலும், மாலையிலும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

karthigai deepam 2022 Flag Hoisted Arulmigu Subramaniya Swamy Temple Thiruparankundram Madurai Karthigai Deepam: திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று  மாலை 7 மணி அளவில் பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 6ஆம் தேதி நாளை, மாலையில் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை மகாதீபமும் ஏற்றப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்  கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்கதர்களின் காலனி பாதுகாப்பு மையம் 16 கால் மண்டபம் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் 16-கால் மண்டபம், சன்னிதி தெரு, கீழரதவீதி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் வழியாக மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தரிசனம் முடித்த பக்தர்கள் அன்னதான மண்டபம் வழியாக வெளியேறி லாலா கடை சந்திப்பு, மேலரதவீதி, வடக்குரதவீதி வழியாக கோயில் வளைவை அடைந்து திருநகர் அல்லது பெரியார் பேருந்து நிலையம் செல்லலாம். கிரிவல பாதை மற்றும் திருப்பரங்குன்றம் மேம்பாலங்களில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

கார்த்திகை தீபத்திருவிழா: திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து மாற்றம் 
 
மாதா அமிர்தானந்தமயி மடம், கிரிவல பாதை அவனியாபுரம் ரோடு சந்திப்பிலுள்ள வாகன நிறுத்துமிடம், அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள காலியிடம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். பேருந்துகள் மேம்பாலங்கள் வழியாக திருப்பரங்குன்றம் செல்ல அனுமதி இல்லை. இப்பேருந்துகள் பைபாஸ் ரோடு வழியாக இயக்கப்படும். இந்த மாற்றங்களை பொதுமக்கள் பயன்படுத்தி சிரமமின்றி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்திட மதுரை மாநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget