மேலும் அறிய

திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசன கட்டணம் பலமடங்கு திடீர் உயர்வு - பக்தர்கள் அதிர்ச்சி

அநியாயமாக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அறநிலையத்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக பக்தர்கள் மண்ணை மண்ணை தூவி சாபம் விட்டு சென்றனர்.

உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு தரிசன கட்டணம் பல மடங்கு உயர்ந்தப்பட்டுள்ளது.
 
இக்கோயிலில் சாதாரண நாட்களில் சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் என இருவழிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.100 மட்டும் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் அதிகாலையில் விஸ்வரூப தரிசன கட்டணமாக ரூ.100 பெறப்படுகிறது. மேலும் அபிஷேக கட்டணமாக சாதாரண நாட்களில் ரூ.500, விஷேச நாட்களில் ரூ. 2 ஆயிரமும் வசூலிக்கப்படுகிறது.

திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசன கட்டணம் பலமடங்கு திடீர் உயர்வு - பக்தர்கள் அதிர்ச்சி
 
இந்த நிலையில், கந்த சஷ்டி திருவிழா இன்று யாகசாலையுடன் துவங்கப்பட்டது. ஆனால் முன்னறிவிப்பு ஏதும் இன்றி தரிசன கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.  சாதரண நாளில் ரூ 500 ஆகவும், விஷேச நாளில் ரூ 2,000 ஆக இருந்த அபிஷேக தரிசன கட்டணம் ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சிறப்பு தரிசன கட்டணம் ரூ.100 ஆக இருந்த கட்டணம் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 2022ல் நிர்ணயித்த சிறப்பு தரிசன கட்டணத்தை திடீரென இன்று உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசன கட்டணம் பலமடங்கு திடீர் உயர்வு - பக்தர்கள் அதிர்ச்சி
 
இந்த நிலையில், இதனை கண்டித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி ஜெயக்குமார் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா, மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி, கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் உட்பட இந்து முன்னணி தொண்டர்கள் முருக பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி கோஷங்கள் எழுப்பினர்.
 
பின்னர், கூட்டத்தில் உள்ளே புகுந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் திடீரென பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கினார். இதனால் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் காட்சி ஆனது. அநியாயமாக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அறநிலையத்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக பக்தர்கள் மண்ணை மண்ணை தூவி சாபம் விட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"கர்ம வினையின் கணக்குப்பிள்ளை: பாசக்கயிறோடு தீர்ப்பெழுதும் காலதேவன்!"
இப்படியொரு தெய்வீகக் காட்சியைப் பார்த்திருக்க மாட்டீர்கள்! மாயூரநாதர் கோயில் முருகர்-தெய்வானை திருக்கல்யாணம்!
இப்படியொரு தெய்வீகக் காட்சியைப் பார்த்திருக்க மாட்டீர்கள்! மாயூரநாதர் கோயில் முருகர்-தெய்வானை திருக்கல்யாணம்!
உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
குரு-சீடர் உறவின் உன்னத விழா! தருமபுரம் ஆதீனத்தில் களைகட்டும் வைகாசிப் பெருவிழா - ஜூன் 7-ல் பட்டினப் பிரவேசம்!
குரு-சீடர் உறவின் உன்னத விழா! தருமபுரம் ஆதீனத்தில் களைகட்டும் வைகாசிப் பெருவிழா - ஜூன் 7-ல் பட்டினப் பிரவேசம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget