மேலும் அறிய

Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்

Sivakumar On DMK: விஷக்கிருமிகள் என காங்கிரசால் விமர்சிக்கப்பட்ட திராவிட கட்சிகள் தான் தமிழ்நாட்டை 69 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளதாக நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Sivakumar On DMK: மக்கள் தான் நீதிபதிகள் அவர்களது தீர்ப்பை குறை சொல்ல முடியாது என, நடிகர் சிவக்குமார் பேசியுள்ளார்.

விஜய் வந்ததில் மகிழ்ச்சி - சிவக்குமார் ஓபன் டாக்:

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்கள் சிவக்குமார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது, கல்வி நிலையங்கள் அருகில் உள்ள மதுபானக்கடைகளை புதிய அரசு மூடியது பற்றிய கேள்விக்கு, அது மிகவும் சந்தோஷமானது என சிவக்குமார் பதிலளித்தார். திரைப்படத்துறையில் இருந்து மேலும் ஒருவர் முதலமைச்சரானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “விஜய் வந்ததால் சந்தோஷப்படலாமே. அவர் வித்தியாசமாக எதையாவது செய்வார் என்று தானே மக்கள் ஓட்டுபொட்டுள்ளார்கள். மாற்றம் என்பதை உலகத்தில் தவிர்க்க முடியாது. 

”திமுககை விஷக்கிருமிகள் என்ற காங்கிரஸ்”

1954ம் ஆண்டு முதல் 9 ஆண்டுகள் காமராஜர் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்தார். 9 வருடங்கள் சிறையில் இருந்தார். 9 ஆண்டுகள் நாட்டை ஆண்டார். அவர் இறக்கும்போது தலைக்கு அருகே 140 ரூபாயும், 4 ஜோடி சட்டையும், 2 ஜோடி காலணிகளும், 5 & 6 புத்தகங்கள் மட்டுமே இருந்தன. அப்படிப்பட்ட தலைவரை உங்களால் பார்க்க முடியுமா? அப்படிப்பட்ட காமராஜரையே நீங்கள் தோற்கடித்தீர்கள் தானே. ஏனென்றால் காமராஜரே உங்களுக்கு தேவையில்லை. மாற்றம் தேவைப்பட்டது. அப்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவிட்டதாக பக்தவச்சலம் கூறினார். அவர்களை விஷக்கிருமிகள் என எப்படி நீங்கள் சொல்கிறீர்கள். 69 வருடங்கள் அவர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்களே? திமுக, அதிமுக 69 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார்களே. அவர்களையும் பிடிக்காமல் தானே இன்று மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளனர். எனவே இதை மக்கள் தான் முடிவு செய்கிறார்கள். மக்கள் தான் நீதிபதிகள் அவர்களது முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். முதல்முறையாக வாக்களித்த சுமார் 90 சதவிகித இளம் தலைமுறையினர் காசு வாங்காமல் ஓட்டு போட்டுள்ளனர். பெண்கள் நிறைய ஓட்டுபோட்டுள்ளனர். எனது பேரன் போன்ற அடுத்த தலைமுறையினர் வாக்களித்துள்ளனர். அவர்களது முடிவை தவறு என சொல்ல நாம் யார்? எனவே விஜய் நல்லது செய்வார் என நம்புவோம்” என சிவக்குமார் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியது.

”டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்”

முன்னதாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி சென்னையில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், “"தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் முன்வைப்பது ஒரே கோரிக்கைதான். மாநிலத்தில் மதுக்கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். குடி மக்களை குடிகார மக்களாக ஆக்கியுள்ளது டாஸ்மாக். மதுபானத்தால் தமிழ்நாட்டில் பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 சதவிகிதத்திற்கும் மேலான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன" என கோரிக்கை வைத்தார். இது திராவிட கட்சிகளின் மீதான அவரது அதிருப்தியாகவே கருதப்பட்டது.

இதையும் படியுங்கள்: Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்

இந்நிலையில் தான் எனது பேரன் உட்பட பலரும் விஜய்க்கு வாக்களித்துள்ளதாகவும், அவர் வந்ததில் மகிழ்ச்சி, நல்லது செய்வார் என நம்புவோம் என்றும் சிவக்குமார் பேசியுள்ளார். இதுபோக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் விஜய் ஆட்சியை பிடித்துவிட்டார் என்றும், பெரும்பான்மை இல்லாத அரசு விரைவில் கவிழ்ந்துவிடும் என்றும், மக்களை ஏமாற்றி தவெக ஆட்சி அமைத்துவிட்டதகாவும் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க வேண்டும் எனவும் சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ப்ரோட்டோகால் என உளறிய மேயர் ப்ரியா..! ஆணவத்தில் எம்.எல்.ஏ.,வை அவமதித்தாரா? TVK பதிலடி
ப்ரோட்டோகால் என உளறிய மேயர் ப்ரியா..! ஆணவத்தில் எம்.எல்.ஏ.,வை அவமதித்தாரா? TVK பதிலடி
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Netflix Free Subscription: ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Embed widget