மேலும் அறிய

முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி

முதலமைச்சர் விஜய் அளித்த இரு வாரக் காலக்கெடு மே 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. நேற்றுடன் 16 நாள்கள் முடிவடைந்து விட்டன. ஆனால், 717 மதுக்கடைகளும் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை- அன்புமணி.

முதலமைச்சர் விஜய் மூட ஆணையிட்ட 717 மதுக்கடைகளில் எத்தனை மூடப்பட்டன? அவற்றை வேறு இடங்களில் திறக்கவே கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக உள்ள மதுக்கடைகளை இரு வாரங்களில் மூட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் ஆணையிட்டிருந்த நிலையில், பெரும்பான்மையான மதுக்கடைகள் மூடப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்த செய்திகள் உண்மையாக இருந்தால்,  இந்த விஷயத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்  மிகுந்த ஏமாற்றமளிக்கின்றன.

பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை அடுத்த இரு வாரங்களில் மூடும்படி கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர்  விஜய் ஆணையிட்டிருந்தார்.

அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

ஆனால், மதுக்கடைகளை மூடும் விஷயத்தில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதை சுட்டிக்காட்டியும், முதலமைச்சர் உத்தரவிட்டவாறு இரு வாரங்களில் 717 மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்றும் கடந்த 23-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து  மே 23ஆம் தேதி வரை 436 மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதாகவும்,  மீதமுள்ள கடைகளும் குறித்த காலத்திற்குள் மூடப்பட்டு விடும் என்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்திருந்தார்.

முதலமைச்சர் விஜய் அளித்த இரு வாரக் காலக்கெடு மே 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. நேற்றுடன் 16 நாள்கள் முடிவடைந்து விட்டன. ஆனால், 717 மதுக்கடைகளும் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை. பல இடங்களில் இன்னும் மதுக்கடைகள் மூடப்படாமல் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வருகின்றன. இதை அனுமதிக்க முடியாது.

எவ்வளவு கடைகள் மூடல்?

விஜய் மூட ஆணையிட்ட 717 மதுக்கடைகளில் எத்தனை மதுக்கடைகள் கடந்த 26-ஆம் தேதிக்குள் மூடப்பட்டன என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். அவற்றில் இதுவரை மூடப்படாத  மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக இப்போது மூடப்படும் 717 மதுக்கடைகளும் வேறு இடங்களில் திறக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Embed widget