மேலும் அறிய

Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புது டிஜிபி பொறுப்பேற்பு; யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?

Tamil Nadu New DGP Mahesh Kumar IPS: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் அகர்வால். சட்டம் படித்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார்.

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய டிஜிபியாக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதும் அந்தந்த அரசுகள், தங்களுக்கு ஏற்ற வகையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை தலைமை இயக்குநர் பதவியான இதுதான், காவல்துறையில் உயரிய பதவி ஆகும்.

யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்?

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் அகர்வால். சட்டம் படித்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். 1994ஆம் ஆண்டு தமிழக பேட்ச்சைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி இவர். காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.

முன்னதாக சென்னைப் பெருநகர காவல் ஆணையராகவும், பிஎஸ்எஃப் எனப்படும் ஆயுதப் படை கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றி உள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சென்னையில் இவரின் சிறப்பான நிர்வாகம், பலரின் பாராட்டுதல்களை பெற்றது. 

Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புது டிஜிபி பொறுப்பேற்பு; யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?

என்னென்ன பதவிகள்?

  • தேனி மாவட்ட எஸ்பி
  • தூத்துக்குடி மாவட்ட எஸ்பி
  • சென்னை பூக்கடை துணை ஆணையர்
  • போக்குவரத்து பிரிவு துணை ஆணையர்
  • சிபிஐ அதிகாரி
  • சிபிசிஐடி ஐஜி
  • மதுரை ஆணையர்
  • சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர்
  • டிஜிபி அலுவலகத்தில் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி
  • கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரி
  • சென்னை காவல் ஆணையர்
  • போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி
  • தமிழக காவல்துறை ஆயுதப்படை டிஜிபி
  • எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் (தற்போதைய பதவி)
  • தமிழ்நாட்டின் டிஜிபி (இனி)

தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அனைத்து புறங்களில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சந்தீப் ராய் ரத்தோர் தற்போது சிறைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மகேஷ் குமார் அகர்வால் இன்று (ஜூன் 3) தமிழ்நாட்டின் 34ஆவது சட்ட ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்று உள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை டூ கன்னியாகுமரி இனி சும்மா பறக்கலாம்! தென் தமிழக மக்களுக்கு மெகா சர்ப்ரைஸ் 8 வழிச்சாலை!
சென்னை டூ கன்னியாகுமரி இனி சும்மா பறக்கலாம்! தென் தமிழக மக்களுக்கு மெகா சர்ப்ரைஸ் 8 வழிச்சாலை!
மாதம் 4 லட்சம் கார்கள் அவுட்! - இந்தியர்கள் அதிகம் வாங்கும் அந்த 2 மாடல்கள் எது தெரியுமா?
மாதம் 4 லட்சம் கார்கள் அவுட்! - இந்தியர்கள் அதிகம் வாங்கும் அந்த 2 மாடல்கள் எது தெரியுமா?
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
வெளியேறிய 100+ விஞ்ஞானிகள்... முடங்கும் முக்கிய திட்டங்கள்? பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை!
வெளியேறிய 100+ விஞ்ஞானிகள்... முடங்கும் முக்கிய திட்டங்கள்? பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Embed widget