மேலும் அறிய

கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை. அது வணிகமாக மாறக்கூடாது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எந்தவித சுரண்டலுக்கும் உள்ளாகாமல் இருப்பதை உறுதி செய்வது தமிழக அரசின் கடமையாகும்- ஸ்ரீகாந்தி ராமதாஸ்.

பள்ளிக் கல்வியில் கட்டண வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய தமிழக அரசும் , தனியார் பள்ளிக் கல்வி இயக்குனரகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக தொகைகள் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கி  RTE (Right to Education) திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம்கூட புத்தகங்கள், நோட்டுகள், சிறப்பு கட்டணம், பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கூடுதல் தொகைகள் பெறப்படுவதாக கூறப்படுவது மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாகும்.

கல்வி வணிகமாக மாறக்கூடாது..

கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை. அது வணிகமாக மாறக்கூடாது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எந்தவித சுரண்டலுக்கும் உள்ளாகாமல் இருப்பதை உறுதி செய்வது தமிழக அரசின் கடமையாகும்.

எனவே, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிக் கல்வி இயக்குனரகம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை பொதுவெளியில் தெளிவாக வெளியிட வேண்டும்.

பள்ளி வளாகத்தின் முக்கிய இடங்களில் மற்றும் பள்ளியின் இணையதளங்களில் கல்விக் கட்டண விவரங்களை கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும்.

மறைமுக கட்டணங்கள் வசூல் கூடாது

RTE திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களிடமிருந்து எந்தவித மறைமுக கட்டணங்களும் வசூலிக்கப்படாததை உறுதி செய்ய தனி கண்காணிப்பு அமைப்பு உருவாக்க வேண்டும்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் தொகைகள் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் அளிக்கும் புகார்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க தனியார் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் சிறப்பு புகார் தீர்வு மையம் அமைக்க வேண்டும்.

வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு

பள்ளிகளின் கட்டண நிர்ணய முறையில் முழுமையான வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வு கொண்ட நடைமுறைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

மாணவர்களின் கல்வி உரிமையையும், பெற்றோர்களின் பொருளாதார நலனையும் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்வி சேவையாக இருக்க வேண்டும்; வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படக்கூடாது என்பதே சமூகத்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு’’ என்று ஸ்ரீகாந்தி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Leave: கோலாம்பஸ்.. கோலாம்பஸ்.. விட்டாச்சு லீவு! நாளை முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
Schools Leave: கோலாம்பஸ்.. கோலாம்பஸ்.. விட்டாச்சு லீவு! நாளை முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
GST சாலையில் இனி சிக்கல் குறையுமா? தாம்பரம்–பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கடைசி பிரிவு திறப்பு!
GST சாலையில் இனி சிக்கல் குறையுமா? தாம்பரம்–பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கடைசி பிரிவு திறப்பு!
TN Weather News: இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
Perungalathur Road Over Bridge: 2 வருட வெயிட்டிங்..! பெருங்களத்தூர் மேம்பால கடைசி கிளை ரெடி - GST ரோட் காலி, ஃப்ரீயா போகலாம்
2 வருட வெயிட்டிங்..! பெருங்களத்தூர் மேம்பால கடைசி கிளை ரெடி - GST ரோட் காலி, ஃப்ரீயா போகலாம்
Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை..! இன்று கடலில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது - வானிலை
தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை..! இன்று கடலில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது - வானிலை
Gold and silver rate today : திடீரென அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இதோ இன்றைய தங்கம், வெள்ளி விலை..
திடீரென அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இதோ இன்றைய தங்கம், வெள்ளி விலை..
Embed widget