ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
உச்ச நீதிமன்றம் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசத்தை 3 ஆண்டுகளாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசத்தை 3 ஆண்டுகளாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணியாற்ற டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
எதற்காக டெட் தேர்வு?
இந்தியா முழுவதும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற, தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசுப் பள்ளிகளில் சேர தனியாக நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. மாநில அரசுகள் தனித் தனியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திக் கொள்கின்றன.
தற்போதைய சூழலில் எந்தவோர் ஆசிரியரும் ஆசிரியர் பணியில் சேர இந்தத் தேர்வு கட்டாயம் ஆகும். இதற்கிடையே ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களும் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2 ஆண்டுகள் அவகாசம்
இந்த நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது, ஆகஸ்ட் 31ஆம் தேதி 2027 வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதனை 3 ஆண்டுகளாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற ஆகஸ்ட் 2028ஆம் ஆண்டு வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இதுகுறித்து பல்வேறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றை விசாரித்த தீபாங்கர் குப்தா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் எப்படி?
தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் பணி நலனைப் பாதுகாக்க, ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு 2026ஆம் ஆண்டு 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. 2026ஆம் ஆண்டில் ஜனவரி 2026, ஜூலை 2026, மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த அரசு, டிஆர்பிக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்






















