திருக்கடையூர் திருத்தேர் உற்சவம் - திரளான பக்தர்கள் வடம் பிடிப்பு
திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், இங்கிருக்கும் சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது.
அழித்தல் தொழில் நின்று போனதால் பாரம் தாங்காத பூமா தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார். இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள் 60, 80,100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஆயூஷ் ஹோமம் திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பதால் இவ்வாலயத்தில் ஆண்டன் 365 நாட்களும் திருமணமும், யாகங்களும் நடைபெறும் ஒரே ஸ்தலாமாகும்.
இக்கோயிலில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 25 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான 8 ஆம் நாள் திருத்தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் அம்பாள் சுவாமி தேரில் எழுந்தருள திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
KamalHaasan on Ponniyin Selvan: வீரன் மணிரத்னம்... பொன்னியின் செல்வன் 2-ஐ பாராட்டிய கமல்ஹாசன்..
தேர் நான்கு மாட வீதிகளையும் வளம் வந்து பின்னர் நிலையை அடைந்தது. சித்திரை தேர் திருவிழாவில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
A R Rahman: ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு இப்படி ஒரு அவமானமா? புனே போலீசாருக்கு நெட்டிசன்கள் கண்டனம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்