கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் அருள் பாலித்து வரும் பாலமுருகனுக்கு மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பன்னீர் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
![கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் Special Abhishekam to Lord Muruga on the occasion of Margazhi Month Sashti at Karur Vishwakarma Siddhi Vinayagar Temple - TNN கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/357d835f72fc315cab94b8b89ebc5b201702964872952113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் பாலமுருகனுக்கு மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் அருள் பாலித்து வரும் பாலமுருகனுக்கு மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சள், கரும்புசாறு, மஞ்சள், சந்தனம், அபிஷேகப்பெடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .அதை தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையை அணிவித்த பிறகு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத சஷ்டி பூஜையை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலய வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய அர்ச்சகர் வசந்து சிறப்பாக செய்திருந்தார்.
கரூர் பசுபதிபாளையம் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் நடத்தும் 14ம் ஆண்டு ஆழி திருவிழா.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் 14 ஆம் ஆண்டு அன்னதானம் மற்றும் ஆழி திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து அம்மன் சுவாமி கரகம் பாலித்து அதன் தொடர்ச்சியாக அமராவதி ஆற்றில் இருந்து ஏழு கன்னி பெண்கள் கையில் அகல் விளக்கு ஏந்தியபடி முக்கிய வீதியில் வழியாக ஆலயம் வலம் வந்த பிறகு பசுபதிபாளையம் வெற்றி திரையரங்கம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஆலயம் அருகே ஏற்றப்பட்டு அதன் தொடர்ச்சியாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மற்றும் பெண் பக்தர்கள் விரதம் இருந்து தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை பசுபதிபாளையம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் சார்பாக சிறப்பாக ஏற்பாடுகளில் செய்திருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)