மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கு பெற்ற பெருந்திடல் தொழுகை
தொழுகை முடிந்த பின்னர் இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை மும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கு பெற்ற பெருந்திடல் தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆகும். இந்த ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.மேலும் இந்த நாட்களில் வசதி இல்லாதவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய மக்களின் கடமையாகும். இந்த உதவியை தான் சகத் என்கிறார்கள். மேலும் நோன்பு காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் திருக்குரான் அனைத்தையும் வாசிக்கவேண்டும். இந்த காலக்கட்டத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் எப்போதும் அவர்களுக்கு அருகிலேயே பயணிப்பது போன்ற எண்ணம் ஏற்படும் என நம்பப்படுகிறது.
ரம்ஜான் நோன்பு என்பது முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று. ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் ரம்ஜான் நோன்பு கடந்த மாதம்( மார்ச் ) 22-ந் தேதி தொடங்கியது. நோன்பு காலத்தில் 5 வேளை தொழுகை செய்தனர். இந்த ரம்ஜான் நோன்பு முடிந்ததன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு முடிந்து திருவாரூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு நேற்று இரவு பள்ளிவாசல்கள் வண்ண, வண்ண, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பண்டியை நாளான நேற்று அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், மார்க்கெட் தெரு ஏ.ஒய்.ஏ. திடல், உள்பட மாவட்டம் முழுவதும் 140 பள்ளிவாசல்கள், 27 திறந்த வெளி பகுதியில் என மொத்தம் 167 இடங்களில் ரம்ஜான் தின தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்த பின்னர் இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை மும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
இந்த மாதத்தின் முக்கிய திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் இஸ்லாமியர்கள் நேற்று காலை மேட்டுப்பாளையம் அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏராளமானோர் திரண்டு தொழுகை நடத்தினார்கள். இதில் மேட்டுப்பாளையம், உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து . இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தி ஏழை எளிய குடும்பங்களுக்கு உணவளித்து ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்த பெருநாள் தொழுகை மேட்டுப்பாளையம் மட்டுமல்லாறு திருவாரூர் மாவட்டத்தில் புலிவலம் கொடிக்கால் பாளையம் பொதக்குடி அத்திக்கடை குடவாசல் வாழ்க்கை கொல்லாபுரம் தண்ணீர் குண்ணம் மரக்கடை வடபாதிமங்கலம் பூதமங்கலம் கூத்தாநல்லூர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சிறப்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கோவை
தமிழ்நாடு
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion