மேலும் அறிய
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
விசிக கொடிக்கம்பம் விவகாரம் - வருவாய்த்துறை அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து - 2ஆவது நாளாக வருவாய்த்துறை அதிகாரிகள் பணி விடுப்பு எடுத்து போராட்டம் செய்தனர்.
விசிக கொடிக்கம்பம்
மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் பகுதியில் கடந்த 7ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 45அடி உயர கொடி ஏற்றுவதற்கு அனுமதியில்லாத நிலையில் அதனை தடுக்காமல் அனுமதி அளித்து உரிய தடுப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறி மதுரை மாவட்டம் சத்திரபட்டி பிர்கா வருவாய் அலுவலர் அனிதா, காவனூர் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், காவனூர், வெளிச்சநத்தம் கிராம நிர்வாக உதவியாளர் பழனியாண்டி ஆகிய மூவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் பணியிடை நீக்க நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று தொடங்கி 2ஆவது நாளாகவும் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் விடுப்பு போராட்டம் காரணமாக இணையவழி சான்று பணிகள் உள்ளிட்ட அனைத்து முழுமையாக முடங்கி பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியான கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் நடப்பட்ட விவகாரத்தில் 3 வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் வருவாய் அலுவலர்களின் போராட்டம் நீடித்து வருவதால் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். வருவாய்த்துறை அலுவலர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று இரவும் காத்திருப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக. வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவிப்பு செய்துள்ளனர்.
இரண்டாவது நாளாகவும் விடுப்பு
மதுரையில் நேற்று வருவாய்த்துறையினரின் நடத்திய முதல் நாள் ஈட்டிய விடுப்பு போராட்டத்தில் 97.6 சதவீதம் பேர் விடுப்பு எடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடிதம் எழுதிய நிலையில் பேச்சுவாரத்தைக்கு கூட அழைக்காத நிலையில் 2ஆவது நாளாக நீடிக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரை 660 பேர் மற்றும், 467 கிராம நிர்வாக அலுவலர்கள், 444 கிராம உதவியாளர்கள் என மாவட்டத்தில் உள்ள 1,609 வருவாய்த்துறையினரில் 1,571 பேர் போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடதக்கது. இந்நிலையில் 2ஆம் நாளாகவும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாகவும் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கை, கால்கள், கண்கள்... குப்பையில் கிடந்த சடலம்... திண்டுக்கல் அருகே கொடூரம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஆதவ் அர்ஜூனா மீது ஆக்ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion