மேலும் அறிய

இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?

வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவை தமிழ்நாடு, கேரளா அரசுகள் இணைந்து கொண்டாடுகின்றன.  

எல்லோருக்கும் எல்லாம் என்பது திமுகவின் கொள்கை என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவை தமிழ்நாடு, கேரளா அரசுகள் இணைந்து கொண்டாடுகின்றன.  கேரளா மாநிலம் வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜய் ஆகியோர் திறந்து வைத்தனர். பெரியார் நினைவக திறப்பு விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சமூக நீதி வரலாற்றின் முதல் வெற்றி விழா நகரமான வைக்கத்தில் இரு மாநில அரசுகள் இணைந்து விழாவை கொண்டாடி வருகின்றன. 2024 ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடக எழுத்தாளர் தேவனூரு மகாதேவவுக் வழங்கப்பட்டது. மைசூருவை சேர்ந்த எழுத்தாளர் தேவனூரு மகாதேவவுக்கு வைக்கம் விருது வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய பெரியாரை நினைவுகூரும் வகையில் வைக்கம் விருது வழங்கப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சியில் பேசிய கேரள முதலவர் பினராயி விஜயன் “சமூக நீதி காவலராக திகழ்ந்தவர் பெரியார். மதம், கடவுளின் பெயரில் மக்களுக்கு கல்வி தடுக்கப்பட்டதை கடுமையாக எதிர்த்தார் பெரியார்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய மண்ணில் பெரியார் கொண்டாடப்படுவதுதான் அவரது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை வரலாற்று பெருமையாக கருதுகிறேன். பெரியார் நூற்றாண்டு தொடக்க விழாவை ஏற்பாடு செய்து எங்களை பினராயி விஜயன் அழைத்தார். இந்திய அளவில் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராய் பினராயி விஜயன் விளங்குகிறார். 

வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ அதைப்போலவே பெரியார் நினைவகமும் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. வைக்கம் பெரியார் நினைவகத்தை சிறப்பாக அமைத்துள்ள பொதுப்பணித்துறை  அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுகள். 

பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறும் இந்நாள், வரலாற்றில் பொன்நாள். கேரளாவுக்கு வரும் அனைவரும் வைக்கம் பெரியார் நினைவகத்தை பார்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாறை அறிய வேண்டும். கர்நாடக மாநிலத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடிய எழுத்தாளர் தேவனூரு மகாதேவவுக்கு வைக்கம் விருது வழங்கப்பட்டுள்ளது. 

ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து ஒரு பெரிய சமூகத்தை மாற்றிய வரலாறு தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் இல்லை. கேரள காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று 5 மாத காலம் வைக்கத்தில் தங்கி பெரியார் போராட்டம் நடத்தினார். கேரளாவில் 75 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார் பெரியார். பெரியாருக்கு எதிரான தடை உத்தரவை திருவிதாங்கூர் சமஸ்தான அரசு வாபஸ் பெற்றதை அறிந்து மக்கள் மகிழ்வர் என எழுதினார் காந்தி. 1925ல் வைக்கம் போராட்ட வெற்றி விழாவில் பங்கேற்க பெரியார், நாகமைக்கு அழைப்பு வந்தது. வைக்கம் போராட்ட வெற்றி விழாவுக்கு தலைமை ஏற்க மறுத்தாலும் பெரியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். 

பெரியாரின் வைக்கம் போராட்டம் மிகவும் முக்கியமானது என அம்பேத்கர் குறிப்பிட்டார். வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல கோயில் நுழைவு போராட்டங்கள் நடந்ததற்கு பெரியாரே காரணம். பெரியாரின் போராட்டம் காரணமாகவே கோயிலுக்குள் நுழையும் அனைவரையும் பாதுகாக்க 1939ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 

வைக்கம் போராட்டத்தில் வென்ற பெரியாருக்கு வைக்கம் வீரர் என பட்டம் சூட்டினார் தமிழ்த் தென்றல்  திருவிக. 

100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறி இருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் வெகுதூரம் முன்னேறி செல்ல வேண்டியுள்ளது. பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர வேண்டும். வைக்கம் போராட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்றவர்களின் பட்டியல் நீளமானது. யாரையும் தாழ்த்திப்பார்க்காத சமத்துவ சிந்தனை மக்கள் மனதில் மலர வேண்டும். 

எல்லோருக்கும் எல்லாம் என்பதை சமத்துவ கொள்கையாக மட்டுமல்லாமல், ஆட்சியின் கொள்கையாகவே தமிழ்நாட்டில் அறிவித்துள்ளோம். வைக்கம்  போராட்ட விழாவை கொட்னாடுவது பெரியாரை போற்ற மட்டுமல்ல. அவர்கள் காட்டிய வழியில் பயணிப்பதற்காகவும்தான். எந்த விலை கொடுத்தாலும் சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
Embed widget