மேலும் அறிய

Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி

தோல்விகளை சந்தித்து வரக்கூடியவர்கள் அவர்களுடைய இருப்பிடத்தை காட்டுவதற்காக அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள் என்றும் கூறினார்.

கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உயிர் சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துவக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சாலை பாதுகாப்பிற்காக தமிழக அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களையும் அதன் பலன்களையும் குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சியில் சாலை பணிகளுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கூடுதலாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். சக்தி ரோடு சாலை அகலப்படுத்துவதற்காக 54 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நிதி தேவைப்பட்டாலும் அதனை தருவதற்கு முதலமைச்சர் தயாராக இருக்கிறார் என தெரிவித்தார்.

Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...

அதானி - திமுக தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து வருவது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை, எனவே சில கருத்துக்களை கூறி வருகிறார்கள் என்றார். உள்ளூரில் நின்றாலும் தோல்வி வெளியூரில் நின்றாலும் தோல்வி என தொடர் தோல்விகளை சந்தித்து வரக்கூடியவர்கள் அவர்களுடைய இருப்பிடத்தை காட்டுவதற்காக அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள் என்றும் அவதூறு கருத்துக்களை பற்றி கவலைப்படுவதற்கு அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

அரசியல் என்பது நாகரீகமாக இருக்க வேண்டும். அரசியலில் இருக்கக்கூடியவர்கள் பக்குவ பட்டவர்களாக இருக்க வேண்டும். கருத்துக்கள் தெரிவிக்கும் பொழுது யாரையும் பழிச்சொல் பேசுவது போல் இல்லாமல் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என கூறிய அவர், அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் அது போன்ற வார்த்தைகளை தான் பயன்படுத்துவார்கள் என்றார்.

பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் முதல்வர் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அனைத்து துறைகளும் மழையை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளது என்றார். விழுப்புரம், கடலூரில் ஏற்பட்ட பாதிப்புகள் இரண்டு நாட்களில் சகஜ நிலைக்கு திரும்ப நின்ற அளவிற்கு அரசின் இயந்திரம் சிறப்பாக செயல்பட்டது என்றார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (11-11-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-11-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை மின் பராமரிப்புப் பணிகள் – மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் எவை?
கோவையில் நாளை மின் பராமரிப்புப் பணிகள் – மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் எவை?
coimbatore power cut: கோவையில் நாளை (10-11-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-11-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஈஷாவின் மண் காப்போம் மாதிரி பண்ணையில் மண் உயிரியல் பயிற்சி! 10 நாடுகள், 6 கண்டங்களைச் சேர்ந்த 46 பேர் பங்கேற்பு
ஈஷாவின் மண் காப்போம் மாதிரி பண்ணையில் மண் உயிரியல் பயிற்சி! 10 நாடுகள், 6 கண்டங்களைச் சேர்ந்த 46 பேர் பங்கேற்பு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
Embed widget