மேலும் அறிய

பக்தர்களுக்கு குட் நியூஸ்... புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் அதிரடி மாற்றம்...! முழு விவரம் உள்ளே

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயில் முழுக்க முழுக்க ஏசி மயமாகப்படவுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள உலக புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் வரும் ஆகஸ்ட் மாதத்திற்க்குள் முழு ஏசி மயமாகிறது.

புதுவை ஒரு ஆன்மீக பூமி. புதுமைகள் பல புரிந்த பல சித்தர்களின் பாதம் பட்ட அருள் பூமி. பூஜைகளும் மணி ஓசைகளும் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் புண்ணிய பூமி. நாட்டில் எத்தனையோ பிள்ளையார் கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பிள்ளையாருக்கும் ஒரு பெயர் இருக்கிறது. புதுவையில் புகழ் பெற்று விளங்குகிறது மணக்குள விநாயகர்.

சுற்றுலா நகரான புதுச்சேரியில் முக்கிய கோயில்களில் ஒன்று மணக்குள விநாயகர் கோயில். கடற்கரை அருகே நகரப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் தரிசனம் செய்வர். புதுச்சேரியில் பொதுமக்கள், வர்த்தகர்கள் என பலரும் ஒவ்வொரு நாளும் இந்தத் திருக்கோயிலுக்கு வருவது வழக்கம். இந்தக் கோயில் முழுக்க முழுக்க ஏசி மயமாகப்படவுள்ளது.

இது குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், மணக்குள விநாயகர் தேவஸ்தானத்தில் பக்தர்களின் நலன் கருதியும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றும் ரூ.33 லட்சம் செலவில், தேவஸ்தானம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள், உற்சவதாரர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த நன்கொடை தொகை போக மீதமுள்ள தொகை, தேவஸ்தான நிதியிலிருந்து ஏசி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

தேவஸ்தானம் முழுவதும் குளிர்சாதன வசதி ஏற்படுத்துவதற்காகும் செலவில் மூன்றில் ஒரு பகுதியான ரூ.11.90 லட்சத்தினை, புதுச்சேரி யூகோ வங்கி நன்கொடையாக இன்று வழங்கியது என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான காசோலையை வங்கி தரப்பினர் முதல்வர் ரங்கசாமி முன்பாக கோயில் நிர்வாகத்திடம் தந்தனர். இந்த நிகழ்வில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மணக்குள விநாயகர் கோவில் (Manakula Vinayagar Temple)

புதுவையில் கடற்கரையை யொட்டி பல உப்பங்கழிகள் இருந்தன. இன்று உப்பனாற்று கால்வாயாக உள்ள அவை செஞ்சி சாலையையொட்டி அமைந்திருந்தது. இந்த உப்பனாற்றின் கீழ் மருங்கில் இன்றைய நேரு வீதி சந்திப்பில் மணல் நிரம்பிய குளக்கரை இருந்தது. அங்கு அரச மரத்தின் அடியில் ஒரு மகா ரிஷியால் மணக்குள விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

அந்த சிலைக்கு மேல் ஒரு கூரை அமைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் விநாயகபெருமானுக்கு கருவறை அமைத்து அதன் உள்ளே பெருமானை நிலை நிறுத்தி வழிபட்டார்கள். அக்காலத்தில் விநாயகர் கருவறை, முன் அர்த்த மண்டபம் மட்டுமே இருந்தன. கோவிலை சுற்றி தோட்டம். நந்தவனம் அமைத்து மதில் சுவர் எழுப்பி வெளிக்கதவும் அமைத்திருந்தனர். அதிகாலையில் எழுந்து, குளங்களில் நீராடி விநாயகரை வழிபட்டு தங்கள் வேலைகளை மக்கள் தொடங்கினார்கள். இந்த விநாயகரின் வடிவம் தொன்மைகால சிற்ப கலை நுணுக்கங்களோடு மெலிந்த உடல் வாகுடன் காணப்பட்டது. 2 கால்களையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் விநாயகர் காணப்பட்டார்.

பிரெஞ்சுகாரர்கள் புதுவையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே இந்த கோவில் தோன்றி விட்டது. 1666-ம் ஆண்டுக்கு முன்பே இந்த கோவில் உருவாகி இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த கோவிலில் இருந்த விநாயக படிமத்தைத்தான் பிரெஞ்சுகாரர்கள்3 முறை கடலில் போட்டதாகவும் விநாயகரும் மறுநாள் காலையில் கருவறையில் இருந்து அன்பர்களுக்கு அருள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. மணக்குள விநாயகர் கோவில் வழிபாட்டுக்கு பிரெஞ்சுக்காரர்கள் பல்வேறு இடையூறுகள் கொடுத்து வந்தார்கள். பின்னர் விநாயகரின் பெருமையை உணர்ந்தார்கள், வியந்தார்கள், பயந்தார்கள். இதையடுத்து விநாயகர் கோவிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்து கொள்ளவும் உற்சவங்கள் நடத்திக்கொள்ளவும் பிரெஞ்சுகாரர்கள் அனுமதி வழங்கினர்.

கோவில் இருந்த இடத்தில் முன் மண்டபம் கட்டிக்கொள்ளவும் அனுமதி வழங்கினார்கள். பிற்காலத்தில் கோவில் மேலோங்குவதற்கும் துணை புரிந்தனர். இதனால் எளிமையாக குளக்கரையில் கீழ்கரையில் ஒரு அரச மரத்தின் கீழ் வீற்றிருந்த விநாயகர் கூரைவேயப்பட்ட நிழலில்அமர்ந்தார். கருவறை மண்டபம் ஏற்படுத்திக்கொண்டார். தனக்கு எதிராக செயல்பட்ட பிரெஞ்சுகாரர்களை கொண்டே தன் கோவில் முன் மண்டபம் அமைத்துக்கொண்டார். நாளும் சுடர்விட ஒளிவிளக்கு ஏற்றிக்கொண்டார். தெருவீதி உலா, உற்சவங்கள் நடைபெற வழிவகுத்துக்கொண்டார். இடையூறு கொடுத்த வெள்ளையர்களே பின்னர் மணக்குள விநாயகரை வணங்கினார்கள். எனவே மணக்குள விநாயகரை வெள்ளைக்கார பிள்ளையார் என்றும் அழைத்தனர்.

தொள்ளைக்காது சித்தர் இந்த மணக்குள விநாயகரை தினமும் வழிபட்டு வந்தார். அவர்மறைவுக்கு பின்னர் கோவிலில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறத் தொடங்கின. வழிபாட்டிற்கு ஊறு நேரா வண்ணம் இருக்க புதிய விநாயகர் சிலை வைக்க முடிவு செய்தனர். அதன்படி பழைய விநாயகர் சிலையின் அருகில் புதிய விநாயகர் சிலையை நிறுவினார்கள். 1930-ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு முன்னர் இது நடந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போது கோவிலின் கருவறையில் மூல விநாயகருக்கு வலது பக்கம் நாக பந்தச்சிலையும் இடது பக்கம் மூத்த முதல்வனாகிய பழைய விநாயகர் சிலையும் இருப்பதை காணலாம். இன்றும் இந்த சாமி சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.

தலைப்பு செய்திகள்

நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!
Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!
விரும்பிய வரம் தரும் விரதங்கள்! செவ்வாய் தோஷம் முதல் செல்வ வளம் வரை… பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!
விரும்பிய வரம் தரும் விரதங்கள்! செவ்வாய் தோஷம் முதல் செல்வ வளம் வரை… பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!
“அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!” - மேல்மலையனூரில் நள்ளிரவில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
“அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!” - மேல்மலையனூரில் நள்ளிரவில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
Embed widget