Vinayagar Chaturthi 2023: பிள்ளையார்பட்டி திருத்தேரோட்ட விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு
காரைக்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கற்பக விநாயகர் பெருமானை வழிபட்டனர்.
#Sivagangai | பிள்ளையார்பட்டி அருள்மிகு ஶ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக நடைபெற்ற திருத்தேரோட்ட விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.@abpnadu | @JSKGopi | @k_for_krish | @HariharanSuloc1 #abplive pic.twitter.com/3hzVhWi3H7
— arunchinna (@arunreporter92) September 19, 2023
இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இந்த கோவிலில் காணப்படும் 15-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள் இக்கோயிலின் தொன்மையை பறை சாற்றுகிறது. செப்டம்பா் மாதத்தில் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவே இங்கு நடைபெறும் பிரதான திருவிழா ஆகும். இந்நிலையில் இந்த ஆண்டு சதுர்த்தி விழா இக்கோயில் கோலாகலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி அன்று தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர். சதுர்த்தி அன்று கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாங்க முறைப்படி சதூர்த்தி விழாவனது நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை இருப்பதால் தீர்த்தவாரி நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தி இன்று நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vinayagar Chaturthi 2023: உலகப் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் வருகை
மேலும் செய்திகள் படிக்க - Vinayagar Chaturthi 2023: மீனாட்சியம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு 18படி அரிசியில் கொழுக்கட்டை படைத்து சிறப்பு வழிபாடு