Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
Parijatham: பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கல்யாண பத்திரிக்கையில் இசையின் பெயர் இடம் பெற்றதற்கு ஸ்ரீஜா கோபமான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க
அதாவது கோபத்தில் ஸ்ரீஜா இதெல்லாம் இசையின் வேலைதான் என இசையை அறைய சுபத்ரா இசை அப்படி செய்யற பொண்ணு இல்ல என்று சொல்லி ஸ்ரீஜாவை மன்னிப்பு கேட்க சொல்கிறார். ஆனால் ஸ்ரீஜா முடியாது என மறுக்கிறாள். மேலும் உங்ககிட்ட வேணா மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லி சுபத்ராவிடம் மன்னிப்பு கேட்டு செல்கிறாள்.
ஸ்ரீஜாவிற்காக மன்னிப்பு கேட்ட விஷால்:
பிறகு விஷால் இசையிடம் எதுக்கு இப்படி பண்ண என்று கோபப்பட இசை இதுக்கும் எனக்கும் இந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறாள். பிறகு விஷால் ஸ்ரீஜாவுக்காக மன்னிப்பு கேட்கிறான். மேலும் எனக்காக ஒரு உதவி பண்ணு என்று சொல்லி அம்மாவை எப்படி ஆவது என்கிட்ட பேச வை என உதவி கேட்கிறான்.
விஷாலுக்காக ஸ்ரீஜா சுபத்ராவிடம் பேச சுபத்ரா விஷாலிடம் பேசவே முடியாது என சொல்லி விடுகிறாள். அதன் பிறகு ஸ்ரீஜா தனியாக இருப்பதை பார்த்த இசை அங்கு வந்து அவளை பளார் என அறைந்து இது நீ கொடுத்தது திருப்பி கொடுத்து இந்த கல்யாணத்தை நடக்க விடமாட்டேன் என சவால் விடுகிறாள்.
இசையைத் தீர்த்துக்கட்ட திட்டமா?
அதன் பிறகு ஸ்ரீஜா அப்பாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவர் நாளைக்கு அந்த இசை இருக்க மாட்டா என வாக்கு கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















