Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி கடத்தப்பட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா:
அதாவது ரவுடிகள் ரேவதியை ஒரு குடோனில் அடைக்க ஒருவன் அவளை போட்டு தள்ளுங்கடா என்று ஆடர் போட ரவுடிகள் ரேவதியை கொல்ல போகும் சமயத்தில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் கௌசல்யா ரவுடிகளிடம் சண்டையிட்டு ரேவதியை காப்பாற்றுகிறார்.
மறுபக்கம் கார்த்திக் பாமை தேடி அலைய இத ரெடி பண்ணி தரும் சண்முகம் என்பவனை சந்தித்தால் உண்மை தெரிந்து விடும் என்று அவனைச் சென்று சந்திக்க அவன் ஆமா ரெட் பாம் ரெடி பண்ணி கொடுத்தது உண்மைதான், ஒரு பாம் செயலிழக்க வச்சாச்சு இன்னொரு பாம் இருக்கு என்று சொல்கிறான். இதனால் கார்த்திக் அது எங்கே இருக்கு என்பதை தேடி அலைகிறான்.
உண்மையை உடைத்த கெளசல்யா:
மறுபக்கம் ரேவதியுடன் அந்த கௌசல்யாவை சாமுண்டீஸ்வரி சந்தித்து யார் நீங்க என்று கேட்க உங்கள் மாப்பிள்ளை கார்த்தியோட காலேஜ் சீனியர் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி குழப்பம் அடைகிறாள். என் மாப்பிள்ளை ஸ்கூலுக்கு மேல படிக்கவே இல்லையே என்று சொல்ல, ரேவதி கௌசல்யா கை பிடித்து சைகை காட்ட ராஜா சேதுபதியோட பேரனும் உங்க மாப்பிள்ளை தானே என்று சொல்லி சமாளிக்கிறாள்.
உடனே சாமுண்டீஸ்வரி எங்க குடும்பத்துக்கு அந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரச்சனையால் பேசாமல் இருக்கிறோம் என்ற விஷயத்தை சொல்கிறாள். பிறகு கௌசல்யா ரேவதியை தனியாக அழைத்துச் சென்று என்னதான் பிரச்சனை என்று கேட்க ரேவதி நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
கார்த்தியை மிரட்டும் காளியம்மாள்:
அடுத்து காளியம்மா கார்த்திக்கு போன் செய்து என்ன கார்த்தி உண்மையை சொல்லிடுறியா என்று கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















