Vinayagar Chaturthi 2023: உலகப் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் வருகை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகப் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் வருகை.
பஞ்சாங்க முறையில் நாளை சதுர்த்தி விழா நடைபெற உள்ளது மேலும் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி, முக்குருணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலகப் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அதிகாலையிலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். குடைவரைக் கோயிலான இக்கோயில், சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. கற்பக விநாயகா் கோயில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோயில்களுள் ஒன்றாகும். இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார்.
#madurai | உலக பிரசித்திப் பெற்ற பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி அதிகாலையில் ஆலயத்தில் குவிந்துள்ள பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.#spritual | @abpnadu | @abplive | @HariharanSuloc1 | @LPRABHAKARANPR3 @SRajaJourno | @k_for_krish | @JSKGopi | @HRajaBJP pic.twitter.com/1fbg4Ag1j6
— arunchinna (@arunreporter92) September 18, 2023
இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இந்த கோவிலில் காணப்படும் 15-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள் இக்கோயிலின் தொன்மையை பறை சாற்றுகிறது. செப்டம்பா் மாதத்தில் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவே இங்கு நடைபெறும் பிரதான திருவிழா ஆகும். இந்நிலையில் இந்த ஆண்டு சதுர்த்தி விழா இக்கோயில் கோலாகலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
மேலும் ஆன்மீக செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Vinayagar Chaturthi 2023: சேலத்தில் தென்னந்தோப்புக்குள் 13 அடி தேங்காய்க்குள் விநாயகர் சிலை
அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் ஸ்ரீ கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி அன்று தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சதுர்த்தி அன்று கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாங்க முறைப்படி சதூர்த்தி விழாவனது இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை இருப்பதால் தீர்த்தவாரி நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தி நாளை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vinayagar Chaturthi 2023: மீனாட்சியம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு 18படி அரிசியில் கொழுக்கட்டை படைத்து சிறப்பு வழிபாடு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: ‘அர்த்த லட்சுமி நாராயணர் சிற்பம்’ - கண்டறியப்பட்ட800 ஆண்டுகால பழமையான கற்சிலை!