மேலும் அறிய

Palani Temple: விண்ணைப் பிளந்த அரோகரா சோசம்... பழனி முருகன் கோயில் சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விழாவின் ஏழு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் இன்று வாழைத்தண்டு படையுடன் தங்களது விரதத்தை நிறைவேற்றினர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழாவும். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

தேனி வழியாக சபரிமலைக்கு போறீங்களா? - கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க! பாதைகள் மாற்றம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்ய கூடிய நிகழ்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் நேற்று மாலை நடைபெற்றது.  மலைமீது எழுந்தருளி இருக்கக்கூடிய மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து சின்னக்குமாரர் சக்திவேலை வாங்கி கொண்டு நவ வீரர்கள் முன்னே அணிவகுத்து வர மலையடிவாரத்திற்கு வந்து சூரபத்மன்களை வதம் செய்தார்.


Palani Temple: விண்ணைப் பிளந்த அரோகரா சோசம்... பழனி முருகன் கோயில் சூரசம்ஹாரம்

முதலில் வடக்கு கிரி வீதியில் தாரகாசுரனையும், அடுத்ததாக கிழக்கு வீதியில் பானுகோபன் சூரனையும் சின்னகுமரர் வதம் செய்வார். பின்னர் தெற்கு கிரி வீதியில் சிங்கமுக சூரனையும் இறுதியாக மேற்கு கிரி வீதியில் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Palani Temple: விண்ணைப் பிளந்த அரோகரா சோசம்... பழனி முருகன் கோயில் சூரசம்ஹாரம்

சூரனை வதம் செய்யக்கூடிய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பி விமர்சியாக திருவிழாவானது நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடு கோயில் நிர்வாகம் செய்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு சஷ்டி விரதத்தில் 6 நாட்கள் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வாழை தண்டு, பழங்கள் வைத்து தீபம் ஏற்றி முருகன் பாடல்கள் பாடியும் சஷ்டி விரதத்தை நிறைவேற்றினர்.

IND vs AUS Final 2023: களமிறங்கிய 6 ஆயிரம் போலீஸ்.. திருப்பி விடப்படும் போக்குவரத்து.. பலத்த பாதுகாப்பில் நரேந்திர மோடி ஸ்டேடியம்!


Palani Temple: விண்ணைப் பிளந்த அரோகரா சோசம்... பழனி முருகன் கோயில் சூரசம்ஹாரம்

IND vs AUS Final 2023: “உலகக்கோப்பை இறுதிப்போட்டியை உடனே நிறுத்தணும்” - காலிஸ்தான் ஆதரவாளர் மிரட்டல்

கந்த சஷ்டி விழாவின் ஏழு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் இன்று வாழைத்தண்டு படையுடன் தங்களது விரதத்தை நிறைவேற்றினர். இதற்காக திரு ஆவினன்குடி வளாகத்தில் வாழைத்தண்டு பழங்களுடன் கூடிய படையல் இட்டு, தீபங்கள் ஏற்றியும், முருகன் துதி பாடல்கள் பாடியும், முருகனுக்கு படைத்து தங்களது விரதத்தை பக்தர்கள் நிறைவேற்றினர். மேலும் கந்த சஷ்டி விழாவில் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்வதற்காக காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்தனர். படிப்பாதை வழியாக பக்தர்கள் மலை மீது சென்று முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget