மேலும் அறிய
Advertisement
மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோயில் ஆருத்ரா தரிசனம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆருத்ரா தரிசன வைபவத்தில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த, ஆனையூரில் அமைந்துள்ளது பழமையான மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்., இந்த திருக்கோயிலில் மார்கழி பௌர்ணமி ஆருத்ரா தரிசன வைபவத்தை முன்னிட்டு நடராஜர் - சிவகாமியம்மன் மற்றும் மாணிக்கவாசகர்-க்கு பால், சந்தனம், தயிர், பன்னீர் என பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.,
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் நடராஜரும், சிவகாமியம்மனும் காட்சியளித்தபடி ஆருத்ரா தரிசனம் மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடும் வைபவம் நடைபெற்றது., முன்னதாக கோவிலின் மூலவரான ஐராவதேஸ்வரர் மற்றும் மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அலங்கராம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்., இந்த ஆருத்ரா தரிசன வைபவத்தில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
க்ரைம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை தீயிட்டு கொளுத்திய காதலன் - இளம்பெண் உயிரிழப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion