மயிலாடுதுறை விளநகர் மேல மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் - பக்தர்கள் நேர்த்திக்கடன்
வெகுவிமரிசையாக நடைபெற்ற மயிலாடுதுறை மேல மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவத்தில், 16 அடி நீளம் கொண்ட அலகு காவடியுடன் பக்தர்கள் தீமிதித்த காட்சி பரவசமடையச் செய்தது.
மேல மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
வெகுவிமரிசையாக நடைபெற்ற மயிலாடுதுறை மேல மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவத்தில், 16 அடி நீளம் கொண்ட அலகு காவடியுடன் பக்தர்கள் தீமிதித்த காட்சி பரவசமடையச் செய்தது . மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த விளநகர் பகுதியில் வடக்கு தெருவில் அமைந்துள்ள பழமையான பிரசித்தி பெற்ற மேல மாரியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் வேண்டிய வரங்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் ஆண்டு தீமிதி உற்சவம் நேற்றிரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து பல நூறாண்டுகளாக இக்கோயிலில் நடைபெறும் தீமிதி திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி காப்பு கட்டுகளுடன் துவங்கியது.
Chithra Pournami : பக்தர்களே! சித்ரா பௌர்ணமி எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? முழு விளக்கம்
பத்துநாள் நிகழ்வுகள்
அதனைத் தொடர்ந்து கோயிலில் பூச்சொரிதல் மற்றும் தினந்தோறும் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதனை அடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்றிரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. தீமிதி திருவிழா முன்னிட்டு, முன்னதாக மேள தாள வாத்தியங்கள் முழங்க காவிரி கரையிலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர் - எங்கு தெரியுமா..?
தீமிதித்து நேர்த்திக்கடன்
பின்னர் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சக்தி கரகம் மற்றும் 16 அடி நீளம் கொண்ட அலகு காவடிகள் தீமிதித்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது. இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.