ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர் - எங்கு தெரியுமா..?
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உத்தால மலர் பூத்துக்குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு தரிசித்தனர்.
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உத்தால மலர் பூத்துக்குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு தரிசித்தனர்.
உக்தவேதீஸ்வரர் கோயில் வரலாறு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பிரசித்தி பெற்ற பழமையான உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்டதும், தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயங்களில் 37 -வது சிவாலயம் இதுவாகும். இங்கு சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். இத்தலத்தில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கி திருமணம் கைகூடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை, இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் தான் சிவபெருமான், பார்வதி தேவியைத் திருமணம் செய்து கொள்வதற்காக கைலாயத்தில் இருந்து பூலோகம் வந்த போது அவருக்கு நிழலாக உத்தால மரம் வந்ததாகவும், திருக்கல்யாணம் முடிந்து சுவாமி, அம்பாள் கைலாயம் செல்லும் போது சுவாமி இத்தலத்தில் உத்தால மரத்தையும், தனது பாதரட்சையையும் விட்டுச் சென்றதாக வரலாறு கூறுகிறது.
Chithra Pournami : பக்தர்களே! சித்ரா பௌர்ணமி எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? முழு விளக்கம்
உத்தால மலர்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சோழ மன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் இன்றளவும் இந்த ஆலய தல விருட்சமான உத்தால மரம் பசுமையுடன் காணப்படுகிறது. மேலும், இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாத கடைசியிலும், சித்திரை மாத முதல் வாரத்திலும் மலர்கள் பூப்பது வழக்கம். இவ்வாண்டு நேற்று இத்தலத்தில் உள்ள உத்தால மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கியது.
Kerala New year Food: பச்ச மாங்காய் பச்சடி, இஞ்சி ரசம் கேரள புத்தாண்டு சிறப்பு உணவுகள் - ரெசிபி இதோ!
வேறு எங்கும் இல்லாத மலர்
இதனை குத்தாலம் மட்டும் இன்றி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து பார்த்து பக்தி பரவசத்தில் தரிசித்து சென்றனர். இந்த உத்தாலம் மலர் ஐந்து விதமான இதழ்களையும், ஐந்து வகையான சுவையையும் கொண்டுள்ளது. மருத்துவ குணம் வாய்ந்த இந்த மலர் மனிதர்கள் உண்ண உகந்தது என சொல்லப்படுகிறது. மேலும் இது அத்தி மரத்தின் ஒருவகை மரமாகும். இந்த உத்தால மரம் உலகில் வேறு எங்கும் இல்லாதது என்பது கூடுதல் தனிச் சிறப்பு ஆகும். ராஜகோபுரத்தைக் கடந்து கோயில் உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், அதனைத் தொடர்ந்து நந்தியும், கொடிமரத்தில் கொடிமர விநாயகரும் அதனையடுத்து வலப்புறம் உத்தால மரம் அமைந்துள்ளது.