Jake Fraser Mcgurk Profile: லக்னோவுக்கு எதிராக அறிமுக போட்டியிலேயே அரைசதம்.. யார் இந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்..?
ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்காக ஐஎல்டி20ல் மூன்று போட்டிகளில் விளையாடினார்.
வெறும் 22 வயதான ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தார்.
யார் இந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்..?
டெல்லி அணியில் மிகவும் இளமையான வீரர் க் ஃப்ரேசர் மெக்குர்க். இவரை ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மிகக் குறைந்த விலையான ரூ. 50 லட்சத்திற்கு வாங்கியது. காயமடைந்த லுங்கி என்கிடிக்கு மாற்றாக டெல்லி அணியில் சேர்க்கப்பட்டார் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்.
நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அறிமுகமான ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், தனது முதல் இன்னிங்ஸிலேயே 33 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உதவியுடன் 55 ரன்களை எடுத்தது. இதனுடன், மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் பண்ட் உடன் இணைந்து 77 ரன்கள் சேர்த்தார்.
முன்னதாக, ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் துபாய் கேப்பிடல்ஸ் அணிக்காக ஐஎல்டி20ல் மூன்று போட்டிகளில் விளையாடினார். அந்த மூன்று போட்டிகளில் 213,72 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 109 ரன்கள் குவித்தார். இதில், ஒரு அரைசதமும் அடங்கும்.
22 வயது:
2002ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி பிறந்த ப்ரேசர் பேட்டிங் மட்டுமல்லாது, லெக் பிரேக் கூக்லி பந்துவீச்சாளர். கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் ஜேக் ஃப்ரேசர். இருப்பினும், இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி 51 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 41 ரன்கள்.
சர்வதேச கிரிக்கெட் தவிர, மெக்குர்க் இதுவரை 16 முதல் தர போட்டி , 21 லிஸ்ட் ஏ மற்றும் 38 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 30 முதல் தர இன்னிங்ஸில் 550 ரன்கள் எடுத்துள்ளார், அதில் அவர் 1 சதம் மற்றும் 1 அரை சதம் அடித்துள்ளார். இது தவிர, ஜேக் ஃப்ரேசர் லிஸ்ட்-ஏ இன் 18 இன்னிங்ஸ்களில் 32.81 சராசரியிலும் 143.83 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 525 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் 1 சதம் மற்றும் 1 அரை சதம் அடித்தார். டி20யின் 36 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்யும் போது, ஃப்ரேசர், 135.13 ஸ்ட்ரைக் ரேட்டில் 700 ரன்கள் எடுத்துள்ளார், அதில் அவர் 4 அரை சதங்கள் அடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி 29 பந்துகளில் சதம் அடித்து தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸின் சாதனையையும் பிரேசர் முறியடித்துள்ளார்.
லிஸ்ட்-ஏ போட்டியில் 29 பந்துகளில் சதம் அடித்த சாதனையை ஃப்ரேசர் மெக்குர்க் படைத்தார். இந்த பட்டியல் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதமாகும். டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனை கிறிஸ் கெயில் பெயரில் உள்ளது. ஐபிஎல் தொடரில் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்தார். இதன்பிறகு, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 31 பந்துகளில் சதம் விளாசிய ஏபி டி வில்லியர்ஸ், ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல்லில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:
58* - கெளதம் கம்பீர் vs ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி, 2008
55 - ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ, 2024
54 - சாம் பில்லிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி 320
53 - பால் காலிங்வுட் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி, 2010
52* - ஷிகர் தவான் vs ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி, 2008