ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி விழா
தரங்கம்பாடி அருகே பொறையாறு செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
தரங்கம்பாடி அருகே பொறையாறு செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் சீர்வரிசை, தென்னங்கன்றுகள், எடுத்தும் சாமியை பல்லக்கில் ஊர்வலமாக சுமந்து சென்றும் வழிபாடு செய்தனர்.
பிரசித்தி பெற்ற செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு ராஜம்பாள் தெருவில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமையான செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.
அரோகரா அரோகரா.. ஆடி மாத வள்ளி தேர்.. காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் குவிந்த பக்தர்கள்..
கொடியேற்றம் மற்றும் தேர்பவனி
கொடியேற்று விழா மற்றும் தேர்பவனி இரண்டு நிகழ்வுகளும் ஒருசேர கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, அலங்கார குதிரை, ஒட்டகம், சென்டைமேளம் முழங்க செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்திலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் சீர்வரிசை, தென்னங்கன்றுகள், எடுத்தும் சாமியை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக பெண்கள் தோளில் சுமந்து கொண்டும் கொடி ஊர்வலம் புறப்பட்டது.
கொடி ஊர்வலம்
அதனை தொடர்ந்து சந்தனகுடம், குதிரை வண்டியில் கொடி ஊர்வலம் சென்றது. பின்னர் மிக்கல் ஆண்டவர், தேவமாதா, குழந்தை ஏசு, செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆகிய சுருவங்கள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விமர்சையாக ஊர்வலம் புறப்பட்டது . ராஜம்பாள் தெரு, மெய்தீன் மரைக்காயர் தெரு, வேப்பமரத்தெரு, காளியம்மன் கோயில் தெரு, பார்வதி அம்மன் கோயில் தெரு வழியாக ஊர்வலம் சென்று ஆலயத்தை அடைந்தது.
த.வெ.க தலைவர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு எப்போது, எங்கு? பரபரப்பு தகவல்கள்
பின்பு ஆலயத்தில் உள்ள கொடிமரத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து கொடி ஏற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாதி மத பேதமின்றி கலந்துக்கொண்டனர்.