மேலும் அறிய

Abp Kovil Ula 2024: சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி பண்டிகை, பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று கோட்டை மாரியம்மனுக்கு தாங்கள் கொண்டு வந்த மலர்களால் அபிஷேகம் செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் ஆடிப் பண்டிகை தொடக்கமாக அம்மனுக்கு பூச்சாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக சேலம் மாநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள அனைத்து மாரியம்மன் கோவிலுக்கும் பெரிய மாரியம்மனாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் பூச்சாட்டு நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு. பின்னர் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பத்து டன் மலர்களைக் கொண்டு பூச்சாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Abp Kovil Ula 2024: சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி பண்டிகை, பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று கோட்டை மாரியம்மனுக்கு தாங்கள் கொண்டு வந்த மலர்களால் அபிஷேகம் செய்தனர். இதன்பின் வருகின்ற 06 ஆம் தேதி இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் 07, 08 மற்றும் 09 ஆம் தேதிகளில் விழாவில் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. தொடர்ந்து 13 ஆம் தேதி அன்று பால்குட ஊர்வலம் மற்றும் மகா அபிஷேகத்துடன் விழாவுடன் நிறைவு பெறும்.

இந்த மாதம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக சேலம் அம்மாபேட்டையில் உள்ள அருள்மிகு பலபட்டறை மாரியம்மன் திருக்கோவிலில் கோவில் முழுவதும் பூக்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

பலபட்டறை மாரியம்மன் திருக்கோவிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரு.வி.க சாலை, குமரகிரி சாலை, கூச்சிக்கள் முனியப்பன் கோவில் வழியாகச் சென்று கோவில் வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதேபோன்று செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவிலிலும் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூக்களில் அபிஷேகம் செய்தனர்.

Abp Kovil Ula 2024: சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி பண்டிகை, பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதேபோன்று குகை, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் திருக்கோவில்களிலும் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 22 நாட்கள் நடைபெறும் ஆடி பண்டிகை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆடி இரண்டாம் வாரம் கம்பம் நடுவது, மூன்றாம் வாரம் பூ கரகம் எடுப்பது, அலகு குத்துதல், பொங்கல் வைப்பது, வண்டி வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் அசம்பாவிதங்களை தடுக்க கோவில்களில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சேலம் மாநகர பகுதியில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்
கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget