மேலும் அறிய

புரட்டாசி மஹாளய அமாவாசை - பூம்புகார் உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்....!

புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு  புகழ்பெற்ற பூம்புகார், காவிரி துலா கட்டம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு பல்வேறு புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

புரட்டாசி மஹாளய அமாவாசை 

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை சிறப்பு வாய்ந்தது. ஆடி மற்றும் தை அமாவாசைகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் என்பது ஐதீகம். அதனை அடுத்து மஹாளய அமாவாசையான இன்று தர்ப்பணம் அளிப்பதன் மூலம் குடும்பத்தில் மறைந்த ஏழு தலைமுறைகளுக்கு தர்ப்பணம் வழங்கப்படுவதாக இந்துக்களின் நம்பிக்கை. 

புரட்டாசி மஹாளய அமாவாசை - பூம்புகார் உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்....!

புண்ணிய நீர்நிலைகள் திரண்ட பக்கம் 

அதனைத் தொடர்ந்து மஹாளய அமாவாசைமான இன்று புண்ணிய நதிகள், குளங்கள், கடற்கரை உள்ளிட்ட புண்ணியம் நீர் நிலைகளில் பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பலிகர்ம பூஜைகள் செய்வது வழக்கம், அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பதினாறு தீர்த்த கிணறுகளுடன் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற காவிரி துலா கட்ட ரிஷப தீர்த்தம் விளங்குகிறது. இங்கு கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம். மேலும் பார்வதி தேவி நீராடி மயில் உறவில் இருந்து பழைய நிலைக்கு பாவ விமோசனம் அடைந்ததாக கோயில் வரலாறு கூறுகிறது. இத்தகைய பல்வேறு சிறப்புமிக்க காவிரி துலாக்கட்டத்தில் மஹாலயா அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றின் கரையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலையிலிருந்து முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்து வருகின்றனர்.

புரட்டாசி மஹாளய அமாவாசை - பூம்புகார் உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்....!

பூம்புகாரில் புனித நீராடல் 

இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த  புகழ்பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில்  மஹாளயா அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றின்  கரையில் ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்து வருகின்றனர். காவிரி கடலில் சங்கமிக்கும் இடத்தில்  நீர் ஆடி வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து உள்ளதால்  பொதுமக்கள் காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரைக்கு வருகை தந்து மஹாளயா அமாவாசை முன்னிட்டு கடலில் புனித நீர் ஆடி வருகின்றனர்.

புரட்டாசி மஹாளய அமாவாசை - பூம்புகார் உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்....!

பிரசித்தி பெற்ற சிவாலயம்

இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

புரட்டாசி மஹாளய அமாவாசை - பூம்புகார் உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்....!

மேலும் பல சிறப்புகள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும்  உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம்  அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.  இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கோயில் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை தொடர்ந்து அங்குள்ள புனித குளங்களில் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget